சசிகலா ககோட்கர்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

சசிகலா ககோட்கர்
Remove ads

சசிகலா ககோத்கர் (Shashikala Kakodkar; 7 சனவரி 1935[1] – 28 அக்டோபர் 2016) பிரபலமாக டாய் (மராத்திய மொழியில் அக்கா என்று பொருள்) என்று அறியப்பட்டவர் மகாராட்டிரவாதி கோமந்த கட்சியின் முக்கியத் தலைவர் ஆவார்.[2] இவர் கோவா, தமனும் தியூவும் முதல் அமைச்சராக இருமுறை பணி புரிந்தார். கோவா, டாமன் மற்றும் டையூவின் முதல் அமைச்சராக இருந்த முதல் பெண் ஆவார்.[3][4][5]

Thumb
சசிகலா ககோத்கர்

ஆரம்ப வாழ்க்கை மற்றும் பின்னணி

சசிகலா ககோத்கர் சனவரி 7 ஆம் நாள் 1935 ஆம் ஆண்டு போர்த்துக்கீசு இந்தியாவில் கோவா மாகாணத்தில் உள்ள பெர்னம் என்ற இடத்தில் தயானந்த், சுனன்ந்தபாய் பாண்டொட்கார் என்பாருக்கு முதல் மகவாக பிறந்தார். இவரின் உடன்பிறந்தோர் உஷா வெங்குர்லெகார், க்ராந்தி ராவ், ஜோதி பாண்டெகார் மற்றும் சித்தார்த் பாண்டொட்கார் ஆகும்.[6][6][7][7]

ககோட்கர் தனது ஆரம்ப பள்ளி படிப்பை முஷ்டிபண்ட் என்ற பள்ளியில் முடித்தார் தனது படிப்பை பனாஜியில் உள்ள மக்கள் உயர்நிலைப் பள்ளியில் முடித்தார். அவரின் 11 ஆம் வயதில் தேசப்பற்றுள்ள சுலோகங்களை முழங்கிக் கொண்டு கோவாவின் விடுதலை இயக்கத்தில் பங்கேற்றார். அதற்காக போர்த்துக்கீசு காவலர்களிடம் அடிபட்டார். இவர் தனது பட்டப் படிப்பை தார்வாடில் உள்ள கர்னாடகா பல்கலைக் கழகத்தில் படித்து இளங்கலை பட்டம் பெற்றார். இவர் இங்கு மானுடவியல், சமூகவியல் மற்றும் வரலாறு படித்தார். இவர் தனது முதுகலை பட்டத்தை மும்பையில் உள்ள எல்பின்ஸ்டோன் கல்லூரியில் பயின்றார்.

1963 ஆம் ஆண்டு கோவா, டையூ மற்றும் டாமனில் நடைபெற்ற முதல் பொது தேர்தலில் இவரின் தந்தை தயானன்ந்த் பாண்டோகார் முதல் முதல் அமைச்சராக வழி வகுத்தது. அந்த வருடம் இவர் குருதத் க்கோட்காரை மணம் புரிந்தார். மேலும் இவர் பாண்டோகார் தொழிற்சாலைகளின் குழுமத்துக்கு தலைவராக நியமிக்கப்பட்டார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads