சஞ்சன் மாகாணம்

ஈரானின் மாகாணம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சஞ்சன் மாகாணம் (Zanjan Province, பாரசீக மொழி : استان زنجان‎, Ostâne Zanjân; also Romanized as Ostān-e Zanjān) என்பது ஈரானின் 31 மாகாணங்களில் ஒன்றாகும். இந்த மாகாணமானது பெரும்பான்மையாக அசர்பைசன் மக்களைக் கொண்ட ஈரானிய அசர்பைஜாசக உள்ளது.[1] இது ஈரானின் பிராந்தியமான பிராந்தியம் 3 இன் ஒரு பகுதியாக உள்ளது.[2] இந்த மாகாணத்தின் தலைநகராக சஞ்சன் நகரம் உள்ளது. இந்த மாகாணத்தின் பரப்பளவு 36,400 கி.மீ.² ஆகும். இந்த மாகாண மக்கள் தொகையானது 1,015,734 (2011) ஆகும். இதில் பெரும்பான்மையினர் கிராமப்புற மக்களாவர். இந்த மாகாணமானது   தெகுரானுக்கு வடமேற்கே 330 கி.மீ. தொலைவில் உள்ளது இது தெகரானுடன் ஒரு தனிவழி மூலம் இணைக்கப்பட்டுள்ளது.[3][4]

Remove ads

விவசாயம் மற்றும் தொழில்

இந்த மாகாணத்தில் வேளாண்மையே முதன்மைத் தொழிலாகும். இங்கு நெல், சோளம் (மக்காச்சோளம்), எண்ணெய் வித்துக்கள், பழங்கள் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை முதன்மையாக விளைவிக்கப்படுகின்றன. மேலும் கோழி, மாடு, செம்மறி ஆடு போன்றவையும் வளர்க்கப்படுகின்றன.[5] இந்த சஞ்சன் பகுதியானது விதை இல்லாத திராட்சைக்கு பிரபலமானது. மேலும் இங்கு செங்கல், சிமென்ட், அரிசி மற்றும் தரைவிரிப்புகள் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன. மேலும் குரோமியம், ஈயம் மற்றும் தாமிரம் போன்ற கனிமங்கள் அகழப்படுகின்றன. அறிவியல் உலகில், சஞ்சன் பெயரானது நாட்டின் உற்பத்தி ஆராய்ச்சி மையங்களில் ஒன்றான ஐ.ஏ.எஸ்.பி.எஸ்.-காகாக புகழ்பெற்றதாக உள்ளது. .

சஞ்சன் மாகாணமானது இங்கு உருவாக்கப்படும் கத்திகள், சரூக் மற்றும் மாலிலே எனப்படும் பாரம்பரிய செருப்புகள் போன்ற அழகிய கைவினைப்பொருட்களுக்காக பெயர் பெற்றது . மாலிலே என்பது வெள்ளி கம்பிகளால் செய்யப்பட்ட கைவினைப்பொருள் ஆகும். சஞ்சானிய கலைஞர்கள் அலங்காரத் தட்டுகள் மற்றும் அவற்றிற்கான சிறப்பான உறைகள் மற்றும் வெள்ளி நகைகள் போன்ற பலவற்றை உருவாக்குகின்றனர். பண்டைய காலங்களில், சஞ்சன் அதன் துருப்பிடிக்காத மற்றும் கூர்மையான கத்திகளுக்கு பெயர் பெற்றது. ஆனால் இந்த பாரம்பரிய சிறப்பானது சீன கத்திகளை சந்தையில் அறிமுகப்படுத்திய காரணத்தினால் படிப்படியாக அழிந்து வருகிறது. காரணம் சீனக்கத்திகளானது மலிவானவையாகவும், சிறந்தவையாகவும் உள்ளன . இன்றும் பல கிராமவாசிகள் பாரம்பரிய கம்பள நெசவாளர்களாக உள்ளனர். இது சஞ்சனின் மிகவும் பிரபலமான கைவினைப் பொருளாகும்.

மத்திய ஈரானை வடமேற்கு மாகாணங்களுடன் இணைக்கும் இதன் புவியியல் இருப்பிடத்தினால் இந்த மாகாண பொருளாதாரம் பயனடைகிறது. சஞ்சன் மாகாணம் வழியாக செல்லும் தொடருந்துகள், நெடுஞ்சாலைகள் போன்றவை ஈரானின் தலைநகரான தெகுரானை தப்ரீசுடன், துருக்கியுடனும் இணைக்கின்றன.

Remove ads

புவியியல் மற்றும் காலநிலை

சஞ்சன் மாகாணத்தின் பரப்பளவு 22,164 கி.மீ. ² ஆகும். இது ஈரானின் பரப்பளவில் 1.34% கொண்டுள்ளது. சஞ்சனில் சராசரி மக்கள் அடர்த்தி ஒரு சதுர கி.மீ.க்கு 4¼ பேராவர். : ஈரான் வடமேற்கே, உள்ள சஞ்சன் மாகாணத்தைச் சுற்றி கிழக்கு அசர்பைசான் மாகாணம், மேற்கு அசர்பைசான் மாகாணம், அமதான் மாகாணம், குர்திஸ்தான் மாகாணம், கீலான் மாகாணம், கஸ்வின் மாகாணம் மற்றும் அருதபீல் மாகாணம் போன்றவை உள்ளன.

சஞ்சன் மாகாணத்தில் உள்ள உள்ள ஷகரிஸ்தான், அல்லது மாவட்டங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:

  • அபர் கவுண்டி
  • இஜ்ருத் கவுண்டி
  • கோடபாண்டே கவுண்டி
  • கோரம்தாரே கவுண்டி
  • ஸஞ்சன் கவுண்டி
  • டாரோம் கவுண்டி
  • மஹ்னேஷன் கவுண்டி
  • சொல்டானியே கவுண்டி

சஞ்சன் ஒரு அல்பைன் காலநிலையைக் கொண்டுள்ளது, இந்த மாகாணமானது குளிர்காலத்தில் மலைப்பகுதிளில் குளிர்ந்த பனி பொழியும் வானிலையும், சமவெளிகளில் மிதமான காலநிலை போன்றவற்றைக் கொண்டுள்ளது. கோடைகாலத்தில், வானிலை வெப்பமாக இருக்கும். சஞ்சனின் சராசரி அதிகபட்ச வெப்பநிலை சுமார் 27   °C, என்றும், சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை -19   °C என்றும் உள்ளது. கோடைக்காலத்தில் வெப்பநிலையானது 32 °C ஆக உயர்ந்தும், பனிக்காலத்தில்   -27 °C; என்று குறைந்தும் காணப்படுகிறதுது.[5]

ஆண்டு மழைப்பொழிவின் துவக்க மாதமான வசந்த காலத்தில் சராசரியாக 72 மில்லிமீட்டர் மழைப்பொழிவும், அதே நேரத்தில் கோடையின் இரண்டாவது மாதத்தில் இது மிகக் குறைந்து 3.6   மிமீ. என ஆகிறது. ஈரப்பதம் விகிதமானது சராசரியாக காலையில் 74% ஆகவும், மதியம் 43% ஆகவும் உள்ளது.[5]

இப்பகுதியில் உள்ள ஒரே பெரிய ஆறு சஞ்சான் ஆறு ஆகும்.[5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads