சத்தீஸ்கர் விரைவுவண்டி

From Wikipedia, the free encyclopedia

சத்தீஸ்கர் விரைவுவண்டி
Remove ads

சத்தீஸ்கர் விரைவுத்தொடருந்து (Chhattisgarh Express:18237/18238) பிலாஸ்பூரையும் அமிர்தசரசையும் இணைக்கும்[1] இந்தியத் தொடருந்து ஆகும். இதன் பெயரே சட்டீஸ்கர் மாநிலத்தினை குறிப்பிடும்படி உள்ளது. இது முதன்முதலில் 1977 ஆம் ஆண்டு போபால் – பிலாஸ்பூருக்கு இடையே சட்டீஸ்கர் அருணாச்சல் விரைவுத்தொடருந்து என அறிமுகப்படுத்தப்பட்டது. அறிமுக காலத்தின்போது பிலாஸ்பூர் மற்றும் ஹபிப்கஞ்சிற்கு (போபால்) இடையே ஓடியது. புதிதாக அமைக்கப்பட்ட துணை நகர்ப்புற தொடருந்து நிலையமான போபாலிலுள்ள ஹபிப்கஞ்சிற்கு அனுப்பப்பட்ட முதல் தொடருந்து இதுவாகும். 1987 ஆம் ஆண்டு, ஹஸ்ரத் நிஜாமுதீன் (புது டெல்லி)யின் தொடருந்து நிலையம் வரை நீட்டிக்கப்பட்டது. இறுதியாக 1990 ஆம் ஆண்டு அமிர்தசரஸ் வரை நீட்டிக்கப்பட்டது.

Thumb
அமிர்தசரஸ் பிலாஸ்பூர் இடையே இயங்கும் சத்தீஸ்கர் விரைவுவண்டியை இழுத்துச் செல்லும் WAP-7 பொறி
Thumb
சட்டீஸ்கர் எக்ஸ்பிரஸ் செல்லும் வழித்தடம்
Thumb
(அமிர்தசரஸ் - பிலாஸ்பூர்) சத்தீஸ்கர் விரைவுவண்டியை இழுத்துச் செல்லும் WDP4B பொறி
Remove ads

பாதை

2011 கிலோ மீட்டர்களை ஆக்கிரமிப்பு செய்யும் இந்தத் தொடருந்து, சட்டீஸ்கர், மகராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம், டெல்லி, ஹரியானா, பஞ்சாப் போன்ற பல மாநிலங்களின் வழியே செல்கிறது. இடைப்பட்ட நிலையங்கள் 251 ல் 85 முக்கிய நிறுத்தங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.[2]

மேலதிகத் தகவல்கள் எண், நிலையத்தின் பெயர் (குறியீடு) ...
Remove ads

தொடருந்து பற்றிய விவரங்கள்

இது தினசரி செயல்படும் விரைவுத்தொடருந்து ஆகும். பிலாஸ்பூரிலிருந்து புறப்படும் தொடருந்தின் எண் 18237 மற்றும் அமிர்தசரஸில் இருந்து புறப்படும் தொடருந்தின் எண் 18238 ஆகும். இந்தத் தொடருந்தில் 24 பெட்டிகள் உள்ளன.

குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads