சட்ட ஆட்சியச் சொற்களஞ்சியம் (நூல்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சட்ட ஆட்சியச் சொற்களஞ்சியம் (Glossary of legal - administrative terms) என்பது கு. சிவமணியால் உருவாக்கபட்ட நிர்வாகம், நீதித்துறை சொற்களைக் கொண்ட சொற் களஞ்சியம் ஆகும். இது 2012 ஆம் ஆண்டு புதுச்சேரி அரசால் வெளியிடப்பட்டது.

விரைவான உண்மைகள் சட்ட ஆட்சியச் சொற்களஞ்சியம் (நூல்), ஆசிரியர்(கள்): ...
Remove ads

வரலாறு

இரண்டாவது ஆட்சிமொழி ஆணையத்தின் தலைவராக நீயரசர் மகராஜன் இருந்தபோது சட்டங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணிக்கு மொழிபெயர்ப்பாளராக கு. சிவமணியை கொண்டுவந்தார். அவர் சட்டங்களை மொழிபெயர்க்கும் பணியிலும், பிறர் மொழிபெயர்ப்பை சரிபார்த்தல் போன்ற பணிகளிலும் ஈடுபட்டார். அப்போது நீதியரசர் மகராஜன் பரிந்துரைத்த தனித் தமிழ் சொற்களை கு. சிவமணி குறித்துவைத்து வந்தார். 1990இல் தமிழக அரசுப் பணியிலிருந்து கு. சிவமணி ஓய்வு பெற்றார். புதுவையில் அயல் பணியில் இருந்த கு. சிவமணிக்கு புதுச்சேரி அரசு இரண்டாண்டு பணி நீட்டிப்பு வழங்கி அவரிடம் இருந்த குறிப்புகளைக் கொண்டு சட்ட ஆட்சியச் சொற்களஞ்சியம் உருவானது. இது மாணவர்களுக்கான அகராதி, வழக்கறிஞர்களுக்கு வழிகாட்டி, மொழிபெயர்ப்பாளர்களுக்கு கையேடு என வெவேறு நோக்கங்களுக்காக பயன்படும் வகையில் தலைமைப் பதிப்பாசிரியராக இருந்து கு. சிவமணி உருவாக்கி 2002 இல் அப்பணியை முடித்தார். பத்தாண்டுகள் கழித்து 1391 பக்கங்கள்[1] கொண்ட இந்த நூலை 27 ஏப்ரல் 2012 அன்று புதுவை முதலமைச்சர் என். ரங்கசாமி வெளியிட்டார்.[2]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads