சதீஷ் சிவலிங்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சதீஷ் சிவலிங்கம் (Sathish Sivalingam, பிறப்பு: சூன் 23, 1992) 2014 பொதுநலவாய விளையாட்டுக்கள், 2018 பொதுநலவாய விளையாட்டுக்கள் ஆகியவற்றில் பாரம் தூக்குதல் – ஆடவர் 77 கிலோ போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய பளுதூக்குனர் ஆவார்.[2]
Remove ads
இயற்வாழ்க்கை
வேலூர் மாவட்டத்திலுள்ள சத்துவாச்சாரியில் உள்ள அட்லஸ் உடற்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற சதீஷ் சிவலிங்கம், 2007ல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் சேர்ந்து நாகராஜ் என்பவரிடம் பயிற்சி பெற்றார்.
விளையாட்டு வாழ்வு
- பள்ளி, மாவட்ட, மாநில, தேசிய அளவில் சப்-ஜூனியர், ஜூனியர் என பல தங்க பதக்கங்களைக் குவித்த இவர், சீனியர் பிரிவுக்கு முன்னேறினார்.
- 2011இல் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய சீனியர் பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.
- 2011இல் தென்னக ரயில்வேயின் எழுத்தர் பணியில் சேர்ந்த இவர், 2011, 2012, 2013 ஆகிய மூன்று ஆண்டுகள் தங்கப் பதக்கம் வென்றார்.[3]
- இசுக்கொட்லாந்தில் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 2014 பொதுநலவாய விளையாட்டுக்களில், சிவலிங்கம் 77 கிலோ வகைப்பாட்டில் தங்கப்பதக்கம் வென்றார்; இசுநாட்சில் 149 கிலோவும் கிளீன் & ஜெர்க்கில் 179 கிலோவுமாக மொத்தம் 328 கிலோ எடையைத் தூக்கி உள்ளார். இசுநாட்சில் 149 கிலோ தூக்கியது புதிய போட்டிச் சாதனையாகும்.[4][5]
- ஆஸ்திரேலியாவின் கோல்ட்கோஸ்டு நகரில் நடந்த 21வது பொதுநலவாய விளையாட்டுக்களில், சிவலிங்கம் 77 கிலோ வகைப்பாட்டில் மீண்டும் தங்கப்பதக்கம் வென்றார்; இசுநாட்சில் 144 கிலோவும் கிளீன் & ஜெர்க்கில் 173 கிலோவுமாக மொத்தம் 317 கிலோ எடையைத் தூக்கினார்.[6]
Remove ads
பெற்ற விருதுகள்
- அருச்சுனா விருது, 2015
மேற் சான்றுகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
