சத்தோசி நகமோட்டோ

From Wikipedia, the free encyclopedia

சத்தோசி நகமோட்டோ
Remove ads

சத்தோசி நகமோட்டோ (Satoshi Nakamoto) எனும் முகம் அறியப்படாத இவர் பிட்காயினின் மூலவடிவத்தை உருவாக்கியவர் ஆவார்.[1] இவர் பிட்காயினின் முதல் தொகுதிச்சங்கிலி தரவை பயன்பாட்டில் விடுத்தார்.[2] இதன்போது டிஜிட்டல் பணம் தொடர்பான இரட்டை செலவீனம் பிரச்சனைக்கு இவரே முதலில் தீர்வு கண்டர். பிட்காயினின் வளர்ச்சிக்கு டிசம்பர் 2010 வரை பங்காற்றினார்.

Thumb
புடாபெஸ்டில் உள்ள சடோஷி நகமோட்டோவின் மார்பளவு சிலை

வாழ்க்கைக் குறிப்பு

நகமொடோ சப்பானில் 5 ஏப்ரல் 1975இல் பிறந்ததாக P2P அறக்கட்டளையின் பக்கத்தில் தன்னைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்.[3] எனினும் இவர் கணினி அறியலிலும், குறியாக்கவியலிலும் பெருமளவு கவனம் செலுத்தியதாகவும், ஜப்பானிய வம்சாவளி அல்லாதவராகவும், ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் வசிப்பவராகவும் ஊகிக்கப்படுகிறது.[4]

பிட்காயினின் சோதனை பரிவர்த்தனையின் போது இவர் பயன்படுத்திய பணம் ஜனவரி 2009 வரை செலவிடப்படாமலேயே உள்ளது. நகமொடோவின் பிட்காயின் முகவரியில் சுமார் பத்து லட்சம் பிட்காயிங்கள் உள்ளது என இதன் பொது பரிவர்த்தனை குறிப்பு மூலம் அறியப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 28 நவம்பர் 2017 ன் படி 17 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கிறது.

2018 ஆம் ஆண்டிலிருந்து[5], அமெரிக்கன் கலைஞரான வின்சென்ட் வான் வால்மர் சாத்தொஷி நாகமோட்டோ என்று இணையம் கூறுகிறது. Z க்கு. எடுத்துக்காட்டாக, அவர் ஒரு கணிதவியலாளரும் கிரிப்டாலஜிஸ்டுமாக இருப்பதைப் பற்றி பேசுகிறார், பிளாக்ஹைன் தொழில்நுட்பத்திற்கு வழிவகுத்த அறிவைக் கொண்ட நிபுணர்களுடன் நல்ல உறவுகளை வைத்திருக்கிறார்[6]. அவர் இந்த உரிமைகோரலை முரண்படுகிறார்[7].

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads