சந்திரசேகர கவிராச பண்டிதர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்திரசேகர கவிராசர் (இறப்பு:1883)[1] கும்பகோணத்திற்கு அருகிலுள்ள தில்லையம்பூரில் பிறந்தவர்[1]. இவர் பழமையான நூல்கள் பலவற்றைப் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.[2]
கல்வியும் பணியும்
இவர் திருத்தணிகை விசாகப் பெருமாளையர், சரவணப் பெருமாளையர் ஆகியோரிடம் கல்வி பயின்றுள்ளார்.[1] சித்தூர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும், கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் தமிழாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். தாண்டவராய முதலியார், இராமநுச கவிராயர் ஆகியோரிடத்து நெருங்கிப் பழகியவர்.[1]
இயற்றிய நூல்கள்
திருவாவடுதுறை ஆதீனம் குருமகாசந்நிதானம் ஸ்ரீசுப்பிரமணியதேசிகர் மீது மும்மணிக்கோவைப் பாடியுள்ளார். பொன்னுசாமித் தேவர் விருப்பத்தின்படி தனிப்பாடல்கள் பலவற்றைத் திரட்டி தனிப்பாடல் திரட்டு வெளியிட்டுள்ளார்.[3] வருஷாதிநூற் சித்தாந்த விளக்கமும், அறுபது வருஷ பலனும் எனும் பழைய நூலை ஆராய்ந்து, 1875 இல் அச்சிட்டு வெளியிட்டார். தண்டியலங்கார மூலத்தையும், அதற்குச் சுப்பிரமணிய தேசிகரால் செய்யப்பட்ட உரையையும் ஆராய்ந்து வெளியிட்டார்.
Remove ads
பதிப்பித்த நூல்கள்
இவர் பதிப்பித்த நூல்கள் சில:[1]
- பாலபோத இலக்கணம்
- நன்னூற் காண்டிகையுரை
- நன்னூல் விருத்தியுரை
- ஐந்திலக்கண வினாவிடை
- யாப்பருங்கலக் காரிகையுரை
- வெண்பாப் பாட்டியல் உரை
- பழமொழித் திரட்டு
- பரத நூல்
- செய்யுட்கோவை
உசாத்துணை
- பூசை சுப்பிரமணியத் தம்பிரான்," குருபரம்பரை விளக்கம்" திருவாவடுதுறை ஆதீனம் வெளியீடு.
- மயிலை சீனி. வேங்கடசாமி, "19 ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்"- மெய்யப்பன் தமிழாய்வகம்-2001.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads