சிவாஜி கண்ட இந்து இராஜ்யம்

அறிஞர் அண்ணா எழுதிய நாடகம் From Wikipedia, the free encyclopedia

சிவாஜி கண்ட இந்து இராஜ்யம்
Remove ads

சந்திரமோகன் அல்லது சிவாஜி கண்ட இந்து இராஜ்யம் என்பது கா. ந. அண்ணாதுரை எழுதிய ஒரு நாடகம் ஆகும். வங்காள வரலாற்று ஆசிரியர் ஜாது நாத் சர்க்காரால் எழுதப்பட்ட சத்ரபதி சிவாஜி குறித்த வரலாற்றுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நாடகத்தை அண்ணாதுரை எழுதினார். இது 1945ஆம் ஆண்டு சென்னையில் அரங்கேறியது. அன்று முதல் இந்த நாடகமானது திராவிட இயக்க நிகழ்வுகளிலும் திமுக மாநாடுகளிலும் பலமுறை அரங்கேற்றப்பட்டது.

Thumb
சிவாஜி கண்ட இந்து இராஜ்யம் நாடகத்தில் காகப்பட்டராக கா. ந. அண்ணாதுரையும், பேரரசர் சிவாஜியாக ஈ. வெ. கி. சம்பத்தும் நடிக்கும் காட்சி
Thumb
1998 பதிப்பிக்கப்பட்ட நூலின் அட்டைப்படம்
Remove ads

அரங்கேற்றம்

1945 திசம்பர் 15 அன்று சென்னை அரண்மனைக்காரத் தெருவில் செயிண்ட் மேரி மண்டபத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற சென்னை மாவட்ட சுயமரியாதை மாநாட்டில் இந்த நாடகம் அரங்கேறியது. நூறு கூட்டங்களில் பேசவேண்டிய விசயங்களை இந்த நாடகம் ஒரே நிகழ்வில் பேசியிருகிறது என்று ஈ. வெ. இராமசாமி அவர்களால் பாராட்டப்பட்டது. இந்த நாடகம் சென்னையில் பிரபலம் அடைந்துவந்தது. அப்போது இந்த நாடகத்தில் ஈ. வெ. கி. சம்பத் பேரரசர் சிவாஜியாகவும், அண்ணாதுரை காகப்பட்டராகவும் நடித்தார். ஈ.வே.கி சம்பத் படிப்பைக் கெடுத்துக் கொண்டு நாடகங்களில் நடிப்பதை ஈ.வே.ரா விரும்பவில்லை.[1] இந்நிலையில் திருச்சிராப்பள்ளியில் பெரியார் தலைமையில் நாடகம் நடத்துவதாக ஏற்பாடு ஆனது. அங்கு இந்த நாடகத்தில் சிவாஜியாக நடிக்க டி. வி. நாராயணசாமியிடம் ஒப்புக் கொண்டிருந்த ம. கோ. இராமச்சந்திரன் பின்னர் ஒத்திகைக்கு அழைத்தபோது நடிக்க மறுத்துவிட்டார். வி. சி கணேசனை சத்ரபதி சிவாஜியாக நடிக்க வைத்தார். வி. சி. கணேசனின் நடிப்பை பாராட்டிய ஈவேரா அவருக்கு சிவாஜி என்ற பட்டத்தை அளித்தார்.[2] நாடகத்தில் அண்ணா காகபட்டராகவும், டி. வி. நாராயணசாமி சந்திரமோகனாகவும் நடித்தார். நாடகத்தில் சத்ரபதி சிவாஜியாக நடித்து பெரியாரின் பாராட்டுதலைப் பெற்ற கணேசன், அதன் பிறகு கணேசன் சிவாஜி கணேசன் என அழைக்கப்பட்டார்.[3] [4][5]

Remove ads

கதைச் சுருக்கம்

வேளாண் குடியைச் சேர்ந்தவரும், சிறந்த போர்வீரருமான சிவாஜி தனது வாளின் வலிமையால் பல்வேறு கோட்டைகளைக் கைப்பற்றி மராத்திய பேரரசை உருவாக்கினார். அவர் தன் வாளின் வலிமையால் பேரரசை உருவாக்கினாலும், கைப்பற்றிய பகுதிகளில் நிலையான ஆட்சியை உருவாக்க வேண்டியது அவசியமானதாக இருந்தது. அப்போதுதான் அது நிலைத்து நிற்கும். அதற்கு அவர் அரியணை ஏறி சத்ரபதியாக மகுடம் சூடவேண்டியது அவசியம்.

அன்றைய மராத்திய சமூகத்தில் பிராமணர்களும், அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த காயஸ்த்துகள் அல்லது பிரபுக்களான சத்திரிய சாதியினர் மட்டுமே படித்தவர்களாக இருந்தனர். அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் அரசாங்கத்தை நிர்வகிப்பது இயலாது என்ற நிலை இருந்தது. சத்திரியரல்லாத சிவாஜி மன்னராக முடிசூடுவதை பிராமணர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். அதனால் சிவாஜி வாரணாசியில் இருந்த வேத விற்பன்னரான காகப்பட்டர் என்பவரை தன்னை சத்திரியராக அறிவிக்கும்படி கோருகிறார். காகப்பட்டர் அவரை சத்திரியராக ஏற்க மறுக்கிறார். ஆனால் பின்னர் சிவாஜி மக்கள் செல்வாக்குக் கொண்டவர் அவர் எப்படியும் மன்னராக முடிசூடிக்கொள்வார். அவரைப் பகைத்துக் கொள்வதைவிட அவருக்கு முடிசூட்டி அதன் வழியாக தன் பிராமண சமூகத்திற்கு நன்மை தேடலாம் என்று முடிவு செய்து சிவாஜிக்ககு முடிசூட்ட இசைவு தெரிவிக்கிறார். அதற்காக காகப்பட்டருக்கும், பல்வேறு பிராமணர்களுக்கும் ஏராளமான பொன்னும் பொருளும் சிவாஜி தானமாகத் தருகிறார். பின்னர் பல சடங்குகளை செய்த பிறகே சிவாஜிக்கு சத்திரிய அந்தஸ்து காக பட்டரால் அளிக்கப்பட்டு சத்ரபதியாக முடி சூடப்படுகிறார். இந்த நிகழ்வில் நாட்டின் கருவூளத்தின் பெரும்பகுதி பிராமணர்களுக்கு கொடுக்கபட்ட தானத்தினால் செலவாகிறது. அவர்களின் ஆதிக்கத்தைக் கண்டு வெகுண்டெழும் படைவீரன் சந்திரமோகனிடம் மக்களிடையே மன மாற்றத்தை ஏற்படுத்தும்படி பணிக்கிறார் சிவாஜி.

இந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து அண்ணாதுரை பிராமணர்களின் அதிகாரம் எத்தகையது என்ற கேள்வியை எழுப்புகிறார். சிவாஜியின் வீரத்தால், அவருடைய வாளின் பலத்தால்தான் பேரரசு உருவானது. ஆனால், அதை ஆள்வதற்கு பிராமண வர்க்கத்தின் தயவு தேவைப்படுகிறது. இந்த நிலைக்கு காரணம் என்ன என்பதை சந்திரமோகன் என்ற போர் வீரன் வாயிலாக சிந்திக்கத் தூண்டுகிறார் அண்ணாதுரை. மக்கள் அறியாமையிலும். பிராமணர்களின் மூட நம்பிக்கைகளுக்கு ஆட்பட்டு இருப்பதும் இருப்பதுமே இதற்கு காரணம் என்பதை தெளிவாக்குகிறார்.

Remove ads

பரவலர் பண்பாட்டில்

ராமன் எத்தனை ராமனடி படத்தில் இந்த நாடகத்தின் ஒரு பகுதியை படத்தின் நாயகன் பாத்திரமான இராமன் (சிவாஜி கணேசன்) நடிப்பதாக காட்சி இடம்பெற்றுள்ளது.[6]

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads