சந்திர மாதம்

நிலா சார்ந்த நேர அலகு From Wikipedia, the free encyclopedia

சந்திர மாதம்
Remove ads

பல்வேறு உலக நாடுகளிலும் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு சந்திர மாதங்கள் கணிக்கப்படுகின்றன. இவை வெவ்வேறு சமயங்களின் அல்லது பண்பாடுகளின் முக்கிய கூறுகளாகின்றன.[1][2][3]

இசுலாம்

பண்டைய அரபுக்களிடத்தில் சந்திர மாதங்களைக் குறிக்க ஒரு நாட்காட்டியும் சூரிய மாதங்களைக் குறிக்க மற்றம் ஒரு நாட்காட்டியும் இருந்தன. இசுலாத்தில் நோன்பு, ஹஜ், ஸக்காத் போன்ற சமய வழிபாடுகளுக்காக சந்திர மாதங்களே கணக்கிற் கொள்ளப்படுகின்றன. ஆயினும் இதிற் கருதப்படும் சந்திர மாதங்களைக் கொண்ட நாட்காட்டி முறை இசுலாத்துக்கு முன்னரே அரபியரிடம் இருந்த வழக்கமாகும். இச்சந்திர மாதங்களாவன:

  1. முஹர்ரம்
  2. ஸபர்
  3. றபீஉல் அவ்வல்
  4. றபீஉல் ஆகிர்
  5. ஜுமாதுல் ஊலா
  6. ஜுமாதுல் உக்றா
  7. றஜபு
  8. ஷஃபான்
  9. றமளான்
  10. ஷவ்வால்
  11. துல்கஃதா
  12. துல்ஹிஜ்ஜா
Remove ads

இந்து சமயம்

இந்துக் காலக் கணிப்பு முறையான சந்திர மானத்தின் அடிப்படையில் சந்திர மாதம் என்பது ஒரு ராசியைக் கடக்க எடுத்துக் கொள்கின்ற காலமாகும். ஒரு மாதத்திற்கு வளர்பிறையான சுக்கிலபட்ச 15 நாட்களையும், தேய்பிறையான கிருஷ்ண பட்ச 15 நாட்களையும் சேர்த்து 30 நாட்களாக கணக்கிடப்படுகிறது.

பூர்ணிமாந்தா என்றும் அமாந்தா என்றும் சந்திர மாதம் வட இந்தியாவில் அழைக்கப்பெறுகிறது.

சந்திர மாதங்கள்

  1. சித்திரை
  2. வைகாசி
  3. ஆனி
  4. ஆடி
  5. ஆவணி
  6. புரட்டாசி
  7. ஐப்பசி
  8. கார்த்திகை
  9. மார்கழி
  10. தை
  11. மாசி
  12. பங்குனி

கருவி நூல்

  • கல்வெட்டுக்களில் பஞ்சாங்கக் குறிப்புகள் - முனைவர் மா.பவானி, உதவிப் பேராசிரியர், கல்வெட்டியல் துறை.
Remove ads

பௌத்தம்

இலங்கை வாழ் சிங்கள பௌத்தரிடையே சந்திர மாதங்களைக் கணிக்கும் முறையே பண்டைக் காலந் தொட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. ஆயினும் பண்டைய முறைக்கும் தற்கால முறைக்குமிடையே வித்தியாசங்கள் காணப்படுவதாகக் கருதப்படுகிறது. அம்மாதங்களாவன:

  1. துருத்து (දුරුතු)
  2. நவம் (නවම්)
  3. மெதின் (මැදින්)
  4. பக் (බක්)
  5. வெசக் (වෙසක්)
  6. பொசொன் (පොසොන්)
  7. எசல (ඇසල)
  8. நிக்கினி (නිකිණි)
  9. பினர (බිනර)
  10. வப் (වප්)
  11. இல் (ඉල්)
  12. உந்துவப் (උඳුවප්)

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads