சந்தீப் சர்மா
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்தீப் சர்மா (Sandeep Sharma) இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கோட்டா மாவட்டத்தில் உள்ள கோட்டா தெற்கு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு இராசத்தான் மாநில சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். பாரதிய சனதா கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3]
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
சந்தீப் சர்மா இராசத்தானின் கோட்டாவைச் சேர்ந்தவர். 1968 ஆம் ஆண்டில் விச்சய் சங்கர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். 1989 ஆம் ஆண்டில் காகதியா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[4]
அரசியல்
2023 ஆம் ஆண்டில் நடைபெற்ற இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய சனதா கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கோட்டா தெற்கு சட்டமன்றத் தொகுதியில் சர்மா வெற்றி பெற்றார். 95,393 வாக்குகளைப் பெற்று, தனது நெருங்கிய போட்டியாளரான இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் இராக்கி கௌதமை 11,962 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.[5] 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற இராசத்தான் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதன்முதலில் சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[6] 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இராசத்தான் சட்டமன்றத் தேர்தலில் அந்த இடத்தைத் தக்க வைத்துக் கொண்டார். 2023 சட்டமன்றத் தேர்தலில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார்.[7]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads