சந்தோஷி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்தோஷி, (Santhoshi) மார்ச் 31, 1987இல் பிறந்த ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார். பாலா , ஜெய் மற்றும் ஹனிமூன் எக்ஸ்பிரஸ் படங்களில் நடித்ததின் மூலமாக அறியப்படுகிறார். மேலும் பிரதானமான தொலைக்காட்சித் தொடரான "அரசி"யில் இவரது நடிப்பு குறிப்பிடத்தக்கது.
Remove ads
தொழில்
சந்தோஷி, கோபால கிருஷ்ணா மூர்த்தி மற்றும் தொலைக்காட்சி நடிகை பூர்ணிமா [1] ஆகியோருக்கு இந்தியாவிலுள்ள சென்னையில் பிறந்தார். இவருக்கு எட்டு வயது இருக்கும்போது, இவருடைய தாயுடன் முதல் முறையாக ஒரு தொலைக்காட்சித் தொடரில் நடித்தார். பின்னர் பாபா (2002) படத்தில் அறிமுகமானார். இதில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இதில், மனிஷா கொய்ராலாவின் சகோதரியாக நடித்தார். அதன்பிறகு, ஆசை ஆசையாய் (2002), பாலா (2002), மாறன் (2002) மற்றும் இராணுவம் (2003) போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2003 ஆம் ஆண்டு சமுத்திரகனியின் உன்னை சரணடைந்தேன் (2003) திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார். தேசிய திரைப்பட விருது- பெற்ற இயக்குநர் அகத்தியன் இயக்கிய காதல் சம்ராஜ்யத்தில் நடித்துள்ளார்.[2] பிந்தையது, இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. தெலுங்குத் திரைப்பட துறையில் ஜெய் (2004) என்னும் தெலுங்குத் திரைப்படத்தில் நவ்தீப்புடன் நடித்து அறிமுகமானார். 2006 ஆம் ஆண்டில் ஹனிமூன் எக்ஸ்பிரஸ் படத்தில் கன்னடத்தில் அறிமுகமானார். அவர் தெலுங்குத் திரைப்படங்களில் நுவ்வஸ்தானண்டே நேனோந்தண்டானா (2005) மற்றும் பங்காரம் (2006) போன்றவற்றில் துணைக் கதா பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் 2005இல் வெளியான தெலுங்குப் படத்திற்காக சிறந்த நகைச்சுவை நடிகைக்கான நந்தி விருதினைப் பெற்றார்.[3] 2007 ஆம் ஆண்டில், பிரபல தொலைக்காட்சித் தொடரான "அரசி"யில் நடித்தார். இதில், கதாநாயகியாக நடித்த ராதிகா சித்தரித்த தொடரில் கலையரசி கதாபாத்திரத்தில் நடித்தார். தொலைக்காட்சி நடிகைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு அழகு போட்டியில் "மிஸ் சின்னத்திரை 2007" என்ற பட்டம் பெற்றார்.[4]
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads