சனநாயகக் கட்சி (இலங்கை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சனநாயகக் கட்சி (Democratic Party, ஜனநாயகக் கட்சி) இலங்கையின் ஓர் அரசியல் கட்சியாகும். இது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினால் ஆரம்பிக்கப்பட்டது.[1] இக்கட்சி 2013 மார்ச் மாதத்தில் இலங்கைத் தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது.[2]
Remove ads
மாகாண சபைத் தேர்தல், 2013
சனநாயகக் கட்சி முதற் தடவையாக 2013 செப்டம்பர் 21 இல் நடைபெற்ற வடக்கு, வடமேற்கு, மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டது. இவற்றில் வடமேற்கு மாகாணத்தில் 46,114 வாக்குகளைப் பெற்று 3 இடங்களையும், மத்திய மாகாணத்தில் 45,239 வாக்குகளைப் பெற்று 2 இடங்களையும் கைப்பற்றியது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில் 170 வாக்குகளை மட்டுமே பெற்றது. எந்த இடங்களையும் கைப்பற்றவில்லை.
Remove ads
மாகாணசபைத் தேர்தல், 2014
2014 இல் இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தல்களில் இக்கட்சி போட்டியிட்டு 12 இடங்களைக் கைப்பற்றியது. தெற்கு மாகாணசபையில் 109,032 வாக்குகளைப் பெற்று 3 இடங்களையும், மேற்கு மாகாணசபையில் 203,767 வாக்குகளைப் பெற்று 9 இடங்களையும் கைப்பற்றியது. ஊவா மாகாணசபைத் தேர்தலில் 6.076 வாக்குகளைப் பெற்று எந்த இடங்களையும் கைப்பற்றவில்லை.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads