சனாகின் மடாலயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சனாகின் மடாலயம் (Sanahin Monastery) ஆர்மீனியாவின் லோரி மாநிலத்தில் அமைந்துள்ள 10வது நூற்றாண்டில் நிறுவப்பட்ட ஆர்மீனிய மடாலயம் ஆகும்.[1]
ஆர்மீனிய மொழியில் சனாகின் "இது மற்றதை விட முந்தையது" எனப் பொருள்படும்; அருகிலுள்ள ஹக்பாட் மடாலயத்தை விட பழமையானது எனக் குறிக்க இவ்வாறு பெயரிடப்பட்டிருக்கலாம். இந்த இரு சிற்றூர்களும் மடாலயங்களும் பல ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன; ஒன்றையொன்று நோக்கியவண்ணம் பிளவுபட்ட பள்ளத்தாக்கின் இருபுறமும் அமைந்துள்ளன. இவற்றிற்கு இடையே பள்ளத்தாக்கைப் பிரித்துக்கொண்டு ஆழ்ந்த பள்ளத்தில் தெபெட் ஆறு ஓடுகின்றது.
ஹக்பாட் போலவே, சனாகினும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது. இந்த வளாகத்தையும் இங்குள்ள பல சிலுவை பொறிக்கப்பட்ட கற்களையும் ஆயர் கல்லறைகளையும் ஆர்மீனியன் திருத்தூதர்சார் திருச்சபை நிர்வகிக்கின்றது.
Remove ads
காட்சிக்கூடம்
- செயின்ட். கிரெகொரி சாப்பல்
- மடாலயத்தின் நூலகம்
- சனாகின் மடாலயத்தின் காட்சி
- மடாலயத்தில் உள்ள சிலுவைக் கல்லின் விவரம்
- மடாலயத்தின் உட்புறம்
- சனாகின் மடாலய உட்புறம்
- சனாகின் மடாலய உட்புறம்
- சனாகின் மடாலய உட்புறம்
- சனாகின் மடாலய உட்புறம்
- மடாலயத்தின் 16வது-நூற்றாண்டு கைச்சுவடிகள் - சார்டோரிஸ்கி அருங்காட்சியகம்
- ஹக்பாட்,சனாகின் மடாலயங்களின் அருகிலுள்ள இடங்களைக் காட்டும் சாலை நிலப்படம்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
