சபர்கந்தா மாவட்டம்

குசராத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

சபர்கந்தா மாவட்டம்
Remove ads

சபர்கந்தா மாவட்டம் (Sabarkantha district), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்துள்ளது. இதன் நிர்வாகத் தலைமையகம் இம்மத்நகர். இம்மாவட்டம் மூன்றாம் நிலநடுக்க மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்திலிருந்த ஆறு வருவாய் வட்டங்களைக் கொண்டு, 2013ஆம் ஆண்டின் ஆகஸ்டு பதினைந்தாம் நாளில் ஆரவல்லி மாவட்டம் புதிதாக துவக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் சபர்கந்தா மாவட்டம், நாடு ...


Thumb
வடக்கு குஜராத் மாவட்டங்கள்
Thumb
சபர்கந்தா மாவட்டம், குஜராத் மாநிலத்தின் புதிய வரைபடம்
Thumb
பொதுநூலகம், இம்மத்நகர்
Remove ads

வருவாய் வட்டங்கள்

Thumb
சபர்கந்தா மாவட்டத்தின் இடர் வட்டத்தில் உள்ள சமணக் கோயில்

இம்மாவட்டம் 7 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.

  1. ஹிம்மத்நகர் வட்டம்
  2. இடர் வட்டம்
  3. பிராந்திஜ் வட்டம்
  4. தாலோட் வட்டம்
  5. கேத்பிரம்மா வட்டம்
  6. வடலி வட்டம்
  7. விஜயநகர் வட்டம்

மாவட்ட எல்லைகள்

சபர்கந்தா மாவட்டம், வடகிழக்கில் ராஜஸ்தான் மாநிலமும், மேற்கில் பனஸ்கந்தா மாவட்டமும், தெற்கில் காந்திநகர் மாவட்டமும், தென்கிழக்கில் ஆரவல்லி மாவட்டமும் எல்லைகளாக கொண்டுள்ளது.

பொருளாதாரம்

நிலக்கடலை, பருத்தி, மட்பாண்டம், எண்ணெய் வித்துக்கள், புகையிலை உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. மேலும் வேதியல், பால் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் கொண்டது.

பரப்பளவும் மக்கட்தொகையும்

சபர்கந்தா மாவட்டத்தின் பரப்பளவு 7390 km2. 2011ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி மாவட்ட மக்கட்தொகை 2,427,346 ஆகும்.[1] 1000 ஆண்களுக்கு 947 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளது. கல்வி அறிவு 67.31%.

சிறப்பு

இம்மாவட்டத்தின் பன்சாரி என்ற கிராமம் குஜராத் மாநிலத்தின் மிகச்சிறந்த கிராமமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads