சமசுகிருதமயமாக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சமசுகிருதமயமாக்கம் என்பது சாதி அடுக்கில் கீழே இருக்கும் பிரிவினர் சமூக சூழ்நிலைகளால் அதிகாரமும், செல்வாக்கும் செலுத்திய சமசுகிருத நடைமுறைகளையும், நம்பிக்கைகளையும் கடைப்பிடிப்பதன் மூலம் தமது சமூக நிலையை இணையாக நிலைநிறுத்த முயற்சிப்பதைக் குறிக்கும். இது சமூகத்தின் பல நிலைகளில் நிகழும்.
மொழி மாற்றம்
சமசுகிருதமயமாக்கத்தால் தமிழ் மொழியில் சமசுகிருத சொற்கள் மிகுந்து முதன்மை பெற்றன. மொழி சிதைந்து மணிப்பிரவாளம் பிறந்தது. எழுத்து வடிவமும் சமசுகிரத மொழியை சிறப்பாக எடுத்தியம்பும் வண்ணம் மாற்றப்பட்டது.
சமய மாற்றம்
பல தரப்பட்ட சமய நம்பிக்கைகள் புறக்கணிக்கப்பட்டு அல்லது உள்வாங்கப்பட்டு இந்து சமசுகிரத சடங்குகளும் நம்பிக்கைகளும் முதன்மைப்படுத்தப்படும்.[1]
சமூக அமைப்பில் மாற்றம்
பக்தவத்சல பாரதி முன்வைக்கும் விமர்சனங்கள்
- "சாதியமைப்புகள் 'மூடிய' சமூக அமைப்பு கொண்டவை. இதில் எந்த ஒரு வகையான தகுதிப் பெயர்வை அடைந்தாலும் ஒரு முதலியார் ஒரு முதலியாரகவே இருக்க முடியும்."
- "கீழ்ச்சாதியினர் உயர்குடியாக்க முறையினால் தகுதி உயர்வை ஏற்படுத்திக் கொண்டால் அவர்கள் அனைவரும் மேல்சாதியினராக மாறிவிடுகின்றனரா? கீழ்ச்சாதிகள் காணாமல் போய்விட்டனவா?"
- "பிராமணர்கள் ஒரு தளத்தில் நவீனத்துவத்தின் மையத்தை நோக்கி நகர்வதும், மறுதளத்தில் கீழுள்ள சாதிகளின் பண்பாட்டை நோக்கி நகர்வதுமான இருதிசை மாற்றங்காளைக் கொண்டுள்ளனர்."
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads