சமபகுதியம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வேதியியலில் சமபகுதியம் அல்லது மாற்றியன் (isomer) என்பது ஒரே மூலக்கூற்று வாய்பாடையும், வேறுபட்ட கட்டமைப்பு வாய்பாடையும் கொண்ட சேர்வைகளாகும். சமபகுதியங்கள் தம்மிடையே ஒரே இயல்புகளை கொண்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. சமபகுதியங்களில் பலவகைகள் உண்டு. இவற்றுள் இரண்டு முக்கிய பிரிவுகள் உண்டு. அவையாவன:

  • கட்டமைப்புச் சமபகுதியம் (structural isomer)
  • திண்மச் சமபகுதியம் (stereo isomer) என்பனவாகும்.[1][2][3]
Remove ads

கட்டமைப்புச் சமபகுதியம்

இவ்வகைச் சமபகுதியங்கள் அணுக்களும் அணுக்கூட்டங்களும் (தொழிற்படு கூட்டம்) வெவ்வேறு வழிகளில் ஒன்றிணைவதால் உருவாகின்றன. இவற்றுள் மூன்று வகைகள் உண்டு. அவையாவன:

  • சங்கிலிச் சமபகுதியம் (chain isomer)
  • நிலைச் சமபகுதியம் (position isomer)
  • தொழிற்படுகூட்டச் சமபகுதியம் (functional group isomer) என்பனவாகும்.

சங்கிலிச் சமபகுதியம்

இவ்வகைச் சமபகுதியத்தில் சேர்வையின் சங்கிலி மாறுபடும். உதாரணமாக, பென்டேன் மூன்று சமபகுதியங்களைக் கொண்டுள்ளது.

பென்டேனின் சங்கிலிச் சமபகுதியங்கள்
Thumb Thumb
n-பென்ட்டேன் ஐசோபென்டேன் நியோபென்டேன்

நிலைச் சமபகுதியம்

இவ்வகைச் சமபகுதியத்தில் பிரதான சங்கிலியில் தொழிற்படுகூட்டத்தின் நிலை மாறுபடும். உதாரணமாக, பென்டனோல் மூன்று சமபகுதியங்களை உடையது.

நிலைச்சமபகுதியத்துக்கான உதாரணங்கள்
Thumb Thumb
1-பென்டனோல் 2-பென்டனோல் 3-பென்டனோல்

தொழிற்படுகூட்டச் சமபகுதியம்

இவ்வகைச் சமபகுதியத்தில் தொழிற்படு கூட்டம் வித்தியாசப்படும்.

தொழிற்படுகூட்டச் சமபகுதியத்துக்கான உதாரணங்கள்
Thumb
சைக்ளோஹெக்சேன் 1-ஹெக்சீன்
Remove ads

திண்மச் சமபகுதியம்

இவ்வகைச் சமபகுதியங்களில் பிணைப்புக்கட்டமைப்பு ஒன்றாகவே காணப்படும். எனினும் வெளியொன்றில் இவற்றின் கேத்திரகணித நிலை வேறுபடும். இவற்றுள் இருவகைகள் உண்டு. அவையாவன:

  • கேத்திரகணித சமபகுதியம் (geometrical isomer)
  • ஒளியியற் சமபகுதியம் (optical isomer) என்பனவாகும்.

கேத்திரகணித சமபகுதியம்

இவ்வகைச் சமபகுதியத்தில் கட்டமைப்பு ஒன்றாயிருப்பினும் கேத்திரகணித அமைப்பில் வேறுபாடு காணப்படும். உதாரணமாக, Dichloroethene பின்வரும் சமபகுதியங்களைக் கொண்டுள்ளது.

Thumb
Dichloroethene சமபகுதியங்கள்

இதனை சிசு-திரான்சு சமபகுதியம் எனவும் அழைப்பர். இங்கு பிணப்பு அச்சின் வழியே ஒரு கோடு வரைந்தால் அக்கோட்டுக்கு ஒரே பக்கத்தில் ஒரே இயல்புடைய அணு அல்லது அணுக்கூட்டங்கள் அமைந்திருந்தால் அது சிசு சமபகுதியம் எனவும், அவை எதிரெதிர்ப் புறங்களில் இருந்தால் அது திரான்சு சமபகுதியம் எனவும் அழைக்கப்படும்.

ஒளியியற் சமபகுதியம்

இச் சேர்வைகளில் சமச்சீரற்ற கரிமம் அணுவொன்று இருத்தல் வேண்டும். இச் சமபகுதியத்தில் ஒன்று தளமுனைவாக்கிய ஒளியை இடப்புறம் திருப்பின், மற்றையது அதனை வலப்புறம் திருப்பும்.

Thumb
ஒளியியற் சமபகுதியங்கள்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads