சமய முரண்பாடுகள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சமயங்கள் தமது உட்பிரிவுகளுக்கு இடையேயும், பிற சமயங்களோடும் பாரிய முரண்பாடுகளைக் கொண்டுள்ளன. பெரும்பாலான சமயங்கள் தமது சமயம் மட்டுமே உண்மையானது என்று கோருவதால், அவர்கள் எல்லோரும் ஒரே நேரத்தில் சரியாக இருக்க முடியாது என்பதில் இருந்து, அன்றாட வாழ்வியல் பரிந்துரைகள், இறையியல், புனித நூல்கள், வெளிப்படுத்தல்கள், சடங்குகள் என பல வழிகளில் சமயங்கள் முரண்படுகின்றன.
இறையியல்
ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்துவமும், இசுலாமும் ஓரிறைக் கொள்கையை முன்வைக்கின்றன. இந்து மதம் இறைவன் ஒருவனாகவும், பலவுருவங் கொண்டும் இருப்பதாக உரைக்கின்றது. [1]
ராமகிருஷ்ண பரமஹம்சர் கருத்து
இந்த முரண்பாடுகளுக்கு இடையே சமரசம் கண்டவர்களுள் முக்கியமானவரான ராமகிருஷ்ண பரமஹம்சரிடம் பக்தர் ஒருவர், இறைவன் உருவமுடையவரா, அருவமானவரா என்று தமது சந்தேகத்தைக் கேட்டதற்கு ’இறைவன் உருவம் உடையவர், உருவம் அற்றவர், இரண்டும் அவரே; பனிக்கட்டியும் தண்ணீரும் போல்’ என்று பதில் கூறுகிறார். [2]
Remove ads
உணவு வழக்கம்
சமய முரண்பாட்டிகு ஒர் எடுத்துக்காட்டு எந்தவகை உணவை உண்பது ஏற்படுடையது என்பது பற்றியதாகும். சமணம் வேர்த் தாவரங்களையும் தவிர் என்கிறது. இந்து மதம் சைவ உணவைப் பரிந்துரைக்கிறது. குறிப்பாக மாட்டை உண்ண வேண்டாம் என்கிறது. இசுலாம் மாடு உண்பதைப் பொருட்படுத்தவில்லை, ஆனால் பன்றி உண்பதைத் தவிர் என்கிறது. ஏன் மனிதனையும் சிலர் உண்கிறார்கள். [3] இந்த சமய முரண்பாடுகள் அவற்றின் உண்மைத் தன்மையை கேள்விக்குட்படுத்துகின்றன.
Remove ads
இல்லறத் துணை
ஒருவனுக்கு ஒருத்தி என்கிறது இராமாயணம். ஆனால் இராமனின் தந்தைக்கே நான்குக்கு மேற்பட்ட மனைவிகள். இந்து மதக் கடவுளான முருகனுக்கே இரண்டு மனைவிகள். இது உள் முரண்பாடு. கிறித்தவம் ஒருவனுக்கு ஒருத்தி என்று ஓரிடத்தில் வலியுறுத்துகிறது(Mt.19:5-8). மொர்மனிசம் பல மனைவிகள் அடைவதே இறைநிலை அடைய வழிமுறை என்கிறது. இது முரண்பாட்டிற்கு இன்னுமொரு உதாரணம்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads