சமூகவியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சமூகவியல் (Sociology) என்பது மனித சமூகம், சமூக உறவுகள், சமூக நடத்தைகள், சமூக அமைப்பு முறை, சமூக வாழ்க்கை முறை ஆகியவற்றை அறிவியல் நோக்கில் ஆயும் ஓர் இயல் ஆகும்.[1][2][3][4][5] இது சமூக ஒழுங்கு, ஒழுங்கின்மை, மாற்றங்கள் ஆகியவை பற்றிய அறிவுத் தொகுதியை உருவாக்கும் நோக்கில் செயல்முறை ஆய்வுகளையும்,[6] பகுப்பாய்வு முறைகளையும்[7] பயன்படுத்தும் ஒரு சமூக அறிவியல் ஆகும். மனிதர்கள் சமூக விலங்குகள். அதாவது மனிதர்களின் அனேக செயல்பாடுகள் பிற மனிதருடன் சேர்ந்தே அமைகின்றன. ஆகையால் சமூகவியலின் முக்கிய ஆய்வுப் பொருளாக சமூகம் அல்லது மக்கள் குழு அமைகின்றது. சமூகம் தனிமனிதனை எப்படி பாதிக்கின்றது, தனிமனிதன் சமூகத்தை எப்படி பாதிக்கின்றான் என்பதும் சமூகவியலின் ஆய்வுக் களமே. சமூகவியலின் தந்தை ஆகஸ்ட் கோம்ட் (Auguste Comte) என்ற பிரெஞ்சு மெய்யியலாளர் ஆவார்.

Remove ads
வரலாறு
சமூகவியலின் தோற்றம் மேற்கத்திய தத்துவத்திலிருந்து தொடங்குகிறது. கிரேக்கத் தத்துவஞானி பிளேட்டோவின் காலம் முதல் சமூகவியல் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. கன்பூசியஸ் வகுத்த வாழ்க்கை முறை பற்றிய கொள்கைகள் சமூகவியல் வளரத் தொடங்கியதை காட்டுகிறது. மேலும் இடைக்கால இஸ்லாத்திலும் சமூகவியல் தோன்றியதற்கான ஆதாரங்களைக் காணலாம். இப்னு கல்துன் எனும் மெய்யியலாளர் தான் உலகின் முதல் சமூகவியலாளர் என்று சிலர் கருதுகின்றனர். அவர் எழுதிய முகத்திமா (அறபு மூலம) (Muqaddimah) எனும் நூலில் சமூக இணைப்பு மற்றும் சமூக முரண்பாடு பற்றி குறிப்பிடுகிறார். எனினும் முறையாக சமூகவியலை முதன் முதலாக விளக்கியவர் ஆகஸ்ட் கோம்ட் என்ற பிரெஞ்சு மெய்யியலாளர் ஆவார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads