சமூக உளவியல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சமூக உளவியல் (Social psychology) என்பது மக்களின் எண்ணங்கள், உணர்வுகள், நடத்தைகள் ஆகியன எவ்வாறு உண்மையான, கற்பனையான அல்லது மற்றவர்களின் குறிப்பான இருப்பால் தாக்கத்திற்குள்ளாகின்றது என்பது பற்றிய அறிவியல் ஆய்வு ஆகும்.[1] இந்த வரையறையில், விசாரணை அனுபவ முறை பற்றியதாக அறிவியல் குறிக்கிறது. எண்ணங்கள், உணர்வுகள் மற்றும் நடத்தைகள் என்ற வரையறைகள் மனித இருப்பில் அளவிடக்கூடிய சகல உளவியல் மாறிகளையும் உள்ளடக்கும். மற்றவர்களின் இருப்பு கற்பனையாக அல்லது மறைமுகமான இருக்கலாம் என்பது மக்கள் இருப்பு இன்றியும், குறிப்பாக தொலைக்காட்சி பார்க்கும்போது அல்லது உள் வயமாகிவிட்ட சமூக விதிமுறைகளை பின்பற்றுதல் போன்ற வேளைகளில் நாம் சமூக செல்வாக்கிற்கு வயப்பட்டவர்கள் என்பதைக் குறிப்பிடுகிறது. சமூக உளவியலாளர்கள் பொதுவாக மனநிலை மற்றும் உடனடி சமூக சூழ்நிலைகளின் இடையூடாட்டத்தின் விளைவாக மனித நடத்தையை விபரிக்கின்றனர். சமூக உளவியலாளர்கள் ஆய்வகம் சார், பட்டறிவுக் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றில் நாட்டம் கொண்டவர்கள். சமூக உளவியல் கோட்பாடுகள் பரந்த மற்றும் பொதுவானவற்றைவிட குறிப்பிட்ட மற்றும் ஒன்று குவிக்கப்பட்டவற்றில் இருப்பதையே நோக்கிச் செல்கிறது.
Remove ads
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads