சமூக மூலதனம்
சமுக கருத்து From Wikipedia, the free encyclopedia
Remove ads
சமூக மூலதனம் என்பது பொருளாதார மற்றும் கலாச்சார மூலதனமாகும், இதில் சமூக வலைப்பின்னல் மையமாக உள்ளது; பரிவர்த்தனைகள், பரஸ்பரம் மாற்றிக் கொள்ளுதல், நம்பகத்தன்மை, ஒத்துழைப்பு ஆகியவற்றால் குறிக்கப்படுகின்றன; மற்றும் சந்தை முகவர்கள், பொருட்கள் மற்றும் சேவைகளை முக்கியமாக தங்களுக்காக உற்பத்தி செய்யாமல், ஆனால் ஒரு பொதுவான நன்மைக்காக தயாரிக்கின்றார்கள்.
இந்தச் சொல் பொதுவாக (அ) வளங்கள் மற்றும் இந்த வளங்களின் மதிப்பு ஆகியவற்றைக் குறிக்கிறது, மேலும் தெளிவாக தெரியக் கூடிய (பொது இடங்கள், தனியார் சொத்துக்கள்) மற்றும் தெளிவற்ற ("ஆதாரங்கள்", "மனித மூலதனம்", மக்கள்) ஆகிய இரண்டையும் குறிக்கும். (ஆ) இந்த வளங்களில் உள்ள உறவுகள், மற்றும் (இ) இந்த உறவில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு வளங்கள், மற்றும் பெரிய குழுக்களில் ஏற்படும் தாக்கம். இது பொதுவாக, பொது மூலதனமாக பார்கப்படுகிறது, இது பொதுவான நலன்களுக்காக பொதுப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.
சமூக மூலதனம் பல்வேறு குழுக்களின் மேம்பட்ட செயல்திறனை, தொழில் முனைவோர் நிறுவனங்களின் வளர்ச்சி, உயர்ந்த மேலாண்மையான செயல்திறன், மேம்பட்ட விநியோக சங்கிலி உறவுகள், உத்திபூர்வ கூட்டணிகளில் இருந்து பெறப்பட்ட மதிப்பு மற்றும் சமூகங்களின் பரிணாம வளர்ச்சி ஆகியவற்றை விவரிக்க பயன்படுகிறது.
1990 மற்றும் 2000 இடைப்பட்ட ஆண்டுகளில் இந்த கருத்து அதிகரித்து, பரந்த அளவிலான சமூக அறிவியல் துறை மற்றும் அரசியலில் மிகவும் பிரபலமடைந்தது.[1][2]
Remove ads
வேர்கள்
ஒரு பழைய யோசனையிலிருந்து ஒரு புதிய பெயர்
சமூக மூலதனத்தின் நவீன வெளிப்பாடானது, சமூக அறிவியலின் ஒரு பழைய விவாதத்தை மீண்டும் புதுப்பித்தது: மேலும் நம்பிக்கை, சமூக வலைப்பின்னல்கள் மற்றும் நவீன தொழிற்துறை சமூகத்தின் வளர்ச்சி ஆகியவற்றுக்கு இடையேயான உறவு பற்றிய விவாதத்தையும் தொடங்கியது. சமூக மூலதனக் கோட்பாடு, பாரம்பரிய மூலதனக் கோட்பாட்டின் ஒருங்கிணைந்த மூலதனத்தின் புலனாகாத வடிவத்தை விவரிப்பதன் மூலம் முக்கியத்துவம் பெற்றது. இந்த வழியில், மூலதனத்தின் பாரம்பரிய வரையறைகளை கடந்து, ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய முறையில் பிரச்சினைகளை சமாளிக்க அனுமதிக்கிறது (Ferragina, 2010:73). சமுதாய உறுப்பினர்களிடயே உள்ள மதிப்பு மற்றும் 'அறிவார்ந்த விருப்பக் கோட்பாடு' மூலம் தனிமனிதவாதம் ஆகியவற்றின் இடையே சமூக மூலதன கருத்துக்களின் தொகுப்பை ஆராய்ச்சியாளர்கள் முன்மொழிய முயற்சிக்கின்றனர். சமூக மூலதனத்தை, சமுதாய உறுப்பினர்கள் மற்றும் சமூக வலைப்பின்னல்கள் ஆகியவற்றை கொண்டு உருவாக்க இயலும், ஆனால் தனிநபர்களும், குழுக்களும் அதை ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். தனிநபர்கள் தனிப்பட்ட நோக்கங்களை அடைய தங்கள் சமூக வலைப்பின்னல் மூலம் சமூக மூலதனத்தை சுரண்டிக்கொள்ள முடியும் மற்றும் குழுக்கள் குறிப்பிட்ட நெறிகள் அல்லது நடத்தைகளை செயல்படுத்துவதற்கு அதைப் பயன்படுத்தலாம். இந்த அர்த்தத்தில், சமூக மூலதனம் கூட்டாக உருவாக்கப்படுகிறது ஆனால் அது தனித்தனியாகவும் பயன்படுத்தப்படலாம், மேலும் சமுதாய உறுப்பினர்கள் மற்றும் தனிமனிதவாதிகள் ஆகியவற்றுக்கு பாலமாகவும் இருக்கிறது.[3]
வரையறை சிக்கல்கள்
மூலதனம் என்ற சொல் மற்றப் பிற பொருளாதார மூலதனங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் சமூக மூலதனமும் இதற்கு ஒத்த (குறைவான அளவிடக்கூடியது என்றாலும்) நன்மைகளை தருகிறது. எனினும் மூலதனத்துடன் சமூக மூலதனத்தை ஒப்பிடுதல் சில சமயங்களில் குழப்பத்தை உண்டாக்குகிறது. பாரம்பரிய மூலதன வடிவங்களைப் போலல்லாமல், சமூக மூலதனம் பயன்பாட்டால் குறையவில்லை; உண்மையில் அது பயன்படுத்தப்படாத போது (பயன்படுத்து அல்லது இழப்பு) மூலம் குறைக்கப்படுகிறது.[4] இது சம்பந்தமாக, மனித மூலதனத்தின் நன்கு அறியப்பட்ட பொருளாதார கருத்துக்கு இது ஒத்திருக்கிறது.
சமூக மூலதனமானது பொருளாதார கோடபாட்டில் கூறப்படும் சமூக முதலாளித்துவத்தில் இருந்து வேறுபட்டுள்ளது. சமூக முதலாளித்துவம், சோசலிசம் மற்றும் முதலாளித்துவம் ஆகிய இரண்டும் பரஸ்பரம் தனித்துவமானவை என்ற கருத்தை ஏற்க மறுக்கிறது. ஏழைகளுக்கான வலுவான சமூக ஆதரவு வலைப்பின்னல் மூலதன வெளியீட்டை அதிகரிக்கிறது என்று சமூக முதலாளித்துவம் கூறுகிறது. வறுமையைக் குறைப்பதன் மூலம், மூலதன சந்தை பங்கு விரிவாக்கப்படுகிறது.
Remove ads
அளவீடு
சமூக மூலதனத்தை எப்படி அளவீடுவது என்பதை பற்றி பரந்த கருத்தொற்றுமை எதுவும் எட்டப்படவில்லை. மேலும் அளவீட முடியாவிட்டால் ஏன் மூலதனம் என்றழைக்க வேண்டும்? என்ற விவாத பொருளாக மாறிவிட்டது.[5] ஒரு குறிப்பிட்ட உறவில் சமூக மூலதனத்தின் நிலை / அளவைப் பொதுவாக ஒருவரால் உள்ளுணர்வு மூலம் அறிந்துகொள்ள முடியும், ஆனால் அளவீடும் முறை சற்று சிக்கலானதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு செயல்பாடுகளை அளவீடு செய்ய வெவ்வேறு அளவீடுகளை ஏற்படுத்தியுள்ளது.
பெயர் இயக்கிகள்
சமூக வலைப்பின்னல்களையும் மற்றும் சமூக மூலதனத்தின் அளவை அறிந்துகொள்வதற்கும் பயன்படும் ஒருவகை அளவீடாக "பெயர் இயக்கிகள்" பயன்படுத்தப்படுகிறது. பங்கேற்பவர்களை இவ்வாறு கேட்பதனால வலைபின்னல் அமைப்பு உருவாக்கப்படுகிறது. எ.கா. "கடந்த ஆறு மாதங்களில் முக்கியமான விஷயங்களை நீங்கள் விவாதித்த விசயங்களின் தலைப்புகளின் பட்டியலிடு?"[6] பெயர் இயக்கிகள் பெரும்பாலும் வலுவற்ற வலைபின்னல்களை விட வலுவான உறவுகளை கொண்ட வலைபின்னல்களை கட்டமைக்க உதவுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads