சமூக வரலாறு

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சமூக வரலாறு என்பது, கடந்த காலத்தின் வாழ்ந்த அனுபவங்களைக் கருத்தில் எடுக்கும் ஒரு வரலாற்றுத் துறை. இத்துறையின் பொற்காலமான 1960 - 1970 காலகட்டத்தில் இது ஒரு முக்கியமான வளர்ச்சித் துறையாக இருந்ததுடன், இன்றும் பிரித்தானியா, கனடா, பிரான்சு, செருமனி, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களின் வரலாற்றுத் துறைகளில் சிறப்பான பிரதிநிதித்துவம் கொண்டுள்ளன.

அண்மைக் காலங்களில் பிற வரலாற்றுத் துறைகளுடன் ஒப்பிடும்போது கூடுதலான ஆய்வாளர்கள் சமூக வரலாற்றில் ஆர்வம் காட்டுகின்னறர். 1975 இலிருந்து 1995 வரை அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் தம்மை சமூக வரலாற்றோடு அடையாளம் காணும் பேராசிரியர்களின் எண்ணிக்கை 31% இலிருந்து 41% ஆகக் கூடியுள்ளது. அதேவேளை அரசியல் வரலாற்றோடு அடையாளம் காண்பவர்களின் தொகை 40% இலிருந்து 30% ஆகக் குறைந்துள்ளது.[1] 2014 இல் பிரித்தானியப் பல்கலைக்கழகங்களின் வரலாற்று பிரிவு ஆசிரியர்கள் 3,410 இல் 878 (26%) பேர் சமூக வரலாற்றுடனும், 841 (25%) பேர் அரசியல் வரலாற்றுடனும் தம்மை அடையாளம் கண்டுள்ளனர்.[2]

Remove ads

பழைய சமூக வரலாறு

1960க்கு முற்பட்ட சமூக வரலாறு பழைய சமூக வரலாறு எனப்படுகிறது. இது அக்கால நடப்புநிலை வரலாற்றுத் துறைகளான அரசியல் வரலாறு, படைத்துறை வரலாறு, இராசதந்திர வரலாறு, அரசியல்சட்ட வரலாறு போன்றவற்றுள் அடங்காத வரலாற்று விடயங்களை உள்ளடக்கியிருந்தது. ஒரு மையக் கருப்பொருள் இல்லாத கலவையாக இருந்த இதில், உயர்குடிக்கு வெளியேயான அரசியல் இயக்கங்கள் போன்றவை அடங்கியிருந்தன. மக்கள் வரலாறு சில சமயங்களில் பெருமளவுக்கு மார்க்சியம் சார்ந்ததாக இருந்ததால், மார்க்சியம் சாராதவர்கள் அதிலிருந்து விலகியே இருந்தனர். சமூக வரலாறானது அரசியல் வரலாறு, புலமைத்துவ வரலாறு, பெரிய மனிதரின் வரலாறு போன்றவற்றில் இருந்து வேறுபட்டு நின்றது. "சமூக வரலாறு இல்லாமல், பொருளாதார வரலாறு வெறுமையானது அரசியல் வரலாறு புரிந்துகொள்ளப்பட முடியாதது." என்று கூறிய ஆங்கில வரலாற்றாளர் ஜி. எம் டிரெவெல்யன், சமூக வரலாறு பொருளாதார வரலாற்றுக்கும், அரசியல் வரலாற்றுக்கும் இணைப்புப் பாலமாக இருக்கிறது என்றார்.[3] சிலவேளைகளில், இது அரசியலை விலக்கி வைத்த வரலாறு என எதிர்மறையாகப் பார்க்கப்பட்டாலும், இது மக்களைத் திரும்ப உள்ளே கொண்டுவந்த வரலாறு எனப் பதில் கூறுகின்றனர்.[4]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads