சரணர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சரணர் என்பது வீரசைவத்தின் முக்கியமான அடியவர்களைக் குறிப்பிடப் பயன்படும் பதம் ஆகும். சுமார் 200இற்கும் மேற்பட்ட சரணர்கள் வீரசைவ மரபில் இனங்காணப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் முப்பதுக்கும் மேல் பெண்கள் ஆவர். [1] இவர்கள் வசனங்கள் எனப்படும் புகழ்பெற்ற கன்னட உரைநடைக் கவிதைகளை யாத்திருக்கிறார்கள். இவ்வசனங்களுக்கு, வீர சைவர்களால், தமிழ்த் தேவாரங்களின் அளவு மரியாதை வழங்கப்படுகின்றது.
பஞ்சாச்சாரியார்


சரணர்களுக்கும் வீரசைவத்தின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் முக்கியமான ஐவர் "ஸ்தாபனாச்சாரியார்" என்று போற்றப்படுகின்றனர். இந்த ஐவரையும் பஞ்சாச்சார்யர் என்று வழிபடுவது இலிங்காயத மரபு. ஐந்து ஆச்சாரியார்களையும் ஈசனின் ஐந்து முகங்களுடனும், இந்தியாவின் ஐந்து வீரசைவ மடங்களுடனும் இணைப்பது மரபு.[2]
இரேவண சித்தர்
அகத்தியரின் குருவாகச் சொல்லப்படும் இரேவண சித்தர் அல்லது இரேணுகாச்சாரியார் வீடணனுக்கு முந்நூறு கோடி இலிங்கங்களை வழங்கியவர் என்றும் கொல்லிப்பாகையிலுள்ள சோமேசுவர இலிங்கத்துடன் தொடர்பானவர் என்றும் வீரசைவ மரபுரைகள் சொல்கின்றன. இரம்பாபுரியில் இவர் வீரசைவ மடம் அமைத்தார்.
மருள சித்தர்
வடக்ஷேத்திரத்திலுள்ள சித்தேசுவர இலிங்கத்துடன் இணைத்து நோக்கப்படும் மருள ஆராத்தியர், உச்செயினியில் ஒரு மடம் அமைத்தார்.
ஏகோராம ஆராத்தியர்
இவர் பிரம்ம சூத்திரத்துக்கு வீரசைவ மரபில் உரை எழுதியதாகச் சொல்லப்படுகின்றது. சுதாகுண்டத்தில் இருக்கும் மல்லிகார்ச்சுன இலிங்கத்துடன் தொடர்பானவர். சிறீசைலத்தில் இவரால் ஒரு மடம் அமைக்கப்பட்டது.
பண்டித ஆராத்தியர்
திராட்சாராமத்து இராமநாத இலிங்கத்துடன் தொடர்பானவர். கேதாரத்தில் மடம் அமைத்தார்.
விஷ்வ ஆராத்தியர்
வாரணாசியின் விசுவ இலிங்கத்துடன் தொடர்பானவர். காசியில் மடம் அமைத்தார்.
Remove ads
முக்கிய சரணர்கள்
பஞ்சாச்சாரியாரின் கொடிவழியில் வீரசைவத்துக்கு வித்திட்ட முக்கியமானவர்களாகத் தம்மை அறிவித்துக்கொண்டோர், பசவர் முதலாய சரணர்கள். முக்கியமான சரணர்களின் பட்டியல் வருமாறு:
- பசவர்
- அக்கா மகாதேவி
- அல்லமப் பிரபு
- சித்தராமேசுவரர்
- சென்ன பசவர்
- சர்வாக்கியர்
- சிவலெங்க மஞ்சண்ணா
- ஸ்ரீபதி பண்டிதர்
- மல்லிகார்ச்சுன பண்டிதாராத்தியர்
- சகலேச மதராசா
- ஹரிஹரர்
- கேரேய பத்மராசா
மேலும் காண்க
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads