சரத்துஸ்தர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சரத்துஸ்தர் (Avestan: Zaraϑuštra; English: Zoroaster), ஈரான் நாட்டின் மாமுனிவரும், சரத்துஸ்திர சமயத்தை உருவாக்கியவரும் ஆவார். இவர் வாழ்ந்த காலம் இன்னும் சரியாக தெரியவில்லை. சில அறிஞர்கள் இவர் பொ.ஊ.மு. 11 அல்லது 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்புகிறார்கள். மற்ற சிலர் இவர் பொ.ஊ.மு. 1750-ல் இருந்து பொ.ஊ.மு. 1500-க்குள் அல்லது பொ.ஊ.மு. 1400-ல் இருந்து பொ.ஊ.மு. 1200-க்குள் வாழ்ந்ததாக நம்புகிறார்கள்.[1] இவர் இயக்கிய காதா சரத்துஸ்திர சமயத்தின் முக்கிய ஸ்தோத்திரம் ஆகும்.
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
Remove ads
பிறப்பு
சரத்துஸ்திர புனித நூல் அவெத்தாபடி இவரது பிறப்பு ஆர்யாணம் வைச்சா என்கிற ஒரு மர்ம பிரதேசத்தில் நிகழ்ந்தது. சில வரலாற்றாளர் இவர் மேற்கு ஈரானில் பிறந்ததாக நம்புகிறார்கள். ஆனால் 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டை சேர்ந்த அறிஞர்கள் இதை மறுக்கிறார்கள். புதிய தலைமுறை வரலாற்றாளர்கள் இவர் கிழக்கு ஈரான், நடு ஆசியா அல்லது ஆப்கானித்தானில் பிறந்ததாக நம்புகிறார்கள்.
சரத்துஸ்தர் ஈரானின் பிரபலமான "ஸ்பிதாமா" குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் புற்ஷஸ்பர் ஆகும்; தாயின் பெயர் துக்தோவா.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads