சரத்சந்திர சட்டோபாத்யாயா

From Wikipedia, the free encyclopedia

சரத்சந்திர சட்டோபாத்யாயா
Remove ads

சரத்சந்திர சட்டோபாத்யாயா (Sarat Chandra Chattopadhyay [1], வங்காளம்: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়) அல்லது சரத்சந்திர சட்டர்ஜீ (Sarat Chandra Chatterjee, 15 செப்டம்பர் 1876 – 16 சனவரி 1938) இருபதாம் நூற்றாண்டின் வங்காள மொழி இலக்கியத்தில் ஒரு மாபெரும் அறிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். விளிம்புநிலை மக்களின் இலக்கியங்களை படைத்ததற்காக ரபீந்திரநாத் தாகூரால் பெரிதும் பாராட்டப் பெற்றார். சரத்சந்திரர் ஏழையாகப் பிறந்தார். இவர் எளிமையானவராகவும், விருந்தோம்பும் பண்புடையவராகவும், அடக்கமானவராகவும் இருந்தார். சரத்சந்திரர் மகாத்மா காந்தியை விமர்சித்துக் கொண்டிருந்த போதும் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து, ஹவுரா மாவட்டக் காங்கிரஸ் இயக்கத் தலைவராகவும் ஆனார். அவருடைய பதேர் தோபி(வழி வேண்டுவோர்) அக்கால புரட்சியாளர்களின் வேதப் புத்தகமாக கருதப்பட்டது. ஆங்கிலேய அரசால் இப்புத்தகம் தடை செய்யப்பட்டது.

விரைவான உண்மைகள் சரத்சந்திர சட்டோபாத்யாயாSarat Chandra Chattopadhyay, பிறப்பு ...
Remove ads

தேவதாஸ்

’தேவதாஸ்’ எனும் கதையைப் பதினேழு வயதில் எழுதினார். இக்கதை பல மொழிகளிலும் மீண்டும் திரைவடிவம் பெற்றுவந்தது.

இவற்றையும் பார்க்க

குறிப்புகள்

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads