சரஸ்வதி ராம்நாத்

தமிழ் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சரஸ்வதி ராம்நாத் (7 செப்டம்பர் 1925 - 2 ஆகத்து 1999) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் இந்தியில் இருந்து தமிழுக்கும், தமிழில் இருந்தும் இந்திக்கும் செய்த மொழிபெயர்ப்புக்களுக்காக பெரிதும் அறியப்படுகிறார்.[1] சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள் என்று பல வகை இலக்கியப் படைப்புக்களை மொழியாக்கம் செய்துள்ளார்.

விரைவான உண்மைகள் சரஸ்வதி ராம்நாத்Saraswathi Ramnath, பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

சரஸ்வதியின் சொந்த ஊர் தாராபுரம் ஆகும். இவரின் தந்தை அளித்த ஊக்கத்தினால் இந்தி மொழியை கற்றார். திருமணத்திற்குப் பிறகு சென்னைக்கு குடிபெயர்ந்தார். சிறுகதை ஆசிரியராக விரும்பி பல சிறுகதைகளை எழுதினார். தினமணிக் கதிர் ஆசிரியராக இருந்த துமிலன் இவரை மொழிபெயர்க்கும் ஆர்வத்தை உருவாக்கினார். இவர் மொழிபெயர்த்த கதைகளை வெளியிட்டு உதவினார்.[2]

இதன் பிறகு இந்தி மொழிப் படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்தார். இந்தி மட்டுமல்லாமல் வேறு இந்திய மொழிகளில் இருந்து இந்திக்கு மொழிபெயர்க்கபட்ட படைப்புகளை இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்தார். இவரின் மகன் மருத்துவராகி பெங்களூருக்கு பணி நிமித்தமாக செல்லவேண்டி இருந்ததால் இவரும் பெங்களூருக்கு குடிபெயர்ந்தார்.

Remove ads

பணி

மொழிபெயர்ப்பு இலக்கியம் பற்றிய நமது சமூகப் பார்வையே குறுகியதாக உள்ளது. படைப்பிலக்கியத்துக்கு அளிக்கப்படும் அந்தஸ்தும் மரியாதையும் மொழிபெயர்ப்புகளுக்கு அளிக்கப்படுவதில்லை. மொழிபெயர்ப்பும் ஒரு படைப்பாக்கம் என்று ஏற்றுக்கொள்ளப்படாத வரையில் இந்நிலை நீடிக்கத்தான் செய்யும். ஏன் என்பதற்கு என்னிடம் நீண்ட பெருமூச்சுதான் பதில் என்று தமிழ்ச் சூழலில் மொழிபெயர்ப்பின் நிலை குறித்து கருத்து கூறி உள்ளார்.[3]

படைப்புகள்

  • தர்பாரி ராகம்[4]
  • ராஜநர்த்தகி
  • கூர்ஜரத்தின் செல்வன்
  • ஜெய சோமநாத்
  • தேவதாசி
  • புயலும் ஒளியும்
  • வீரசுதந்திரம்
  • சப்தபதி
  • கங்கை தாய்
  • ராதையுமில்லை , ருகுமணியுமில்லை
  • நமக்கு நாமே அந்நியர்கள்
  • கோதானம்[5] (2003)
  • இனி வீடு திரும்ப வேண்டும் (தொகுப்பாளர்: பாவண்ணன், 2002)

விருதுகள்

  • பல்வேறு இந்திய மொழிகளில் உள்ள சிறந்த நாடகங்களை, இந்திய மொழி நாடகங்கள் என்ற தலைப்பில், தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்தமையை சாகித்திய அகாதமி பாராட்டி, சிறந்த தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருதை 1993ஆம் ஆண்டில் வென்றார்.[6]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads