கடல் மட்டம்

From Wikipedia, the free encyclopedia

கடல் மட்டம்
Remove ads

சராசரி கடல் மட்டம் (Mean sea level, MSL) என்பது பொருத்தமான நிலத்திலுள்ள நிலையான ஓர் ஆதாரப் புள்ளியின் சார்பான கடலின் உயரமாகும். ஆனால் நிலத்திலுள்ள ஆதாரப் புள்ளியை தெரிவுசெய்வது மிகச் சிக்கலான பணியாகும். மேலும் கடலின் சரியான உயரத்தைக் கண்டறிவது கடினமான செயலாகும்.[1] சராசரி கடல் மட்டம் என்பது கடல் அலை, காற்று போன்றவற்றால் பாதிக்கப்படாத நிலையாக நிற்கும் கடலின் உயரமாகும். கணிப்பின் போது நீண்ட நேரத்துக்கு எடுக்கப்படும் உயர அளவீடுகளின் சராசரி மதிப்பை, சராசரி கடல் மட்டமாக கொள்ளப்படும். கடலின் உயரம் நிலத்துக்கு சார்பாக அளவிடப்படுவதால் சராசரி கடல் மட்டமானது கடல் நீர் உயர வேறுபாட்டாலோ அல்லது நிலத்தில் ஏற்படும் உயரவேறுபாடு காரணமாகவோ மாற்றம் அடையலாம்.[2]

Thumb
நிலையாக உள்ள நிலவியல் சூழல்களில் பொருத்தப்பட்டிருந்த, 23 நீர்மட்ட ஏற்றத்தாழ்வுகளை அளக்கும் கருவிகளின் அளவீடுகளில் இருந்து பெற்ற, சராசரி கடல்மட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்தைக் காட்டும் படம்.

கடல் மட்டத்துக்கு மேல் (above sea level) பொதுவாக கடல் மட்டத்திற்கு மேல் உள்ள ஓர் இடத்தின் உயரத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கடல் மட்டம் என்பது சராசரியாக கடல் ஒட்டிய நிலத்தின் நிலை ஆகும். கடல் மட்டத்திற்கு மேல் உயரத்தைப் பொருத்து வளிமண்டல அழுத்தம் வேறுபடும். எனவே வான்வழிப் போக்குவரத்தில் இது ஒரு முக்கிய குறியீடு ஆகும். இவ்வளவீடு உண்மையில் சராசரி கடல் மட்டத்திற்கு மேல் (above mean sea level, AMSL) என்பதையே குறிக்கிறது.

Remove ads

கடல் மட்டம் உயர்வு

அமெரிக்காவில் அமைந்துள்ள புவி மற்றும் கோள் அறிவியல் துறை சார்பில் இரண்டரை ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியில் கடந்த நூற்றாண்டைவிட இந்த நூற்றாண்டில் 14 செ.மீட்டர்கள் கடல் மட்டம் உயர்ந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். கடந்த 1000 முதல் 1400 ஆம் ஆண்டுவரை புவி குளிர்ந்து இருந்ததால் 8 செ.மீட்டர்களே கடல் மட்டம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.[3][4]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads