Remove ads

சரிகமபத நீ (Sarigamapadani) ரா. பார்த்திபன் இயக்கத்தில் 1994 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பார்தோபன், சங்கீதா, விஜயகுமார், மனோரமா, வினு சக்ரவர்த்தி, சின்னி ஜெயந்த், பெரிய கருப்பு தேவர் மற்றும் பலர் நடித்திருந்தனர். சீதா தயாரிப்பில், தேவா இசை அமைப்பில், 10 பிப்ரவரி 1994 ஆம் தேதி இப்படம் வெளியானது. எதிர்மறையான விமர்சனத்தைப் பெற்ற இப்படம் வணிக ரீதியில் தோல்வி அடைந்தது.[1][2][3][4][5][6][7]

விரைவான உண்மைகள் சரிகமபத நீ, இயக்கம் ...
Remove ads

நடிகர்கள்

ஆர். பார்த்திபன், சங்கீதா, விஜயகுமார், மனோரமா, வினு சக்ரவர்த்தி, சின்னி ஜெயந்த், பெரிய கருப்பு தேவர், வைத்தி, பிரசன்னா குமார், தளபதி தினேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

கதைச்சுருக்கம்

குலசேகரன் (ஆர். பார்த்திபன்) ஒரு மதுபானக் கடை முதலாளி. அவனுக்கு கல்லூரியில் நேரம் கழிப்பது மிகவும் பிடித்த ஒன்று. மேலும், பெண்களை மயக்கி தன்வசப்படுத்துவதை வழக்கமாக கொண்டவன். அவனது தந்தை கபாலி (வினு சக்ரவர்த்தி) குடிப் பழக்கத்திற்கு அடிமையானவர், அவனது தாய் மிகவும் சாதுவானவர்.

ஒரு திருமண விழாவில், சங்கீதா எனும் இளம் பெண்ணை தன் வசப்படுத்த முயல்கிறான் குலசேகரன். துவக்கத்தில் அவனை பிடித்திருந்தாலும், குலசேகரன் தவறாக நடந்துகொண்டதால் அவனை விட்டு விலகிச் செல்கிறாள் சங்கீதா.

பின்னர், அர்ச்சனா எனும் கல்லூரி மாணவியை தன் வசப்படுத்த முயல்கிறான் குலசேகரன். அவளும் குலசேகரன் வலையில் வீழ்கிறாள். இருப்பினும், அவர்களது உறவு நீண்ட நாள் நீடிக்கவில்லை. விளையாட்டாக காதலித்ததாக தெரிவித்தாள் அர்ச்சனா. இதே போல் பல முறை நடப்பதால், மனமுடைந்த குலசேகரன் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகிறான். பின்னர் குலசேகரனுக்கு என்னவானது எனபது தான் மீதிக் கதையாகும்.

Remove ads

ஒலிப்பதிவு

இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்தார். புலமைப்பித்தன் இயற்றிய ஒன்பது பாடல்களை கொண்ட ஒலித்தொகுப்பு 1994 ஆம் ஆண்டு வெளியானது.[8][9]

மேலதிகத் தகவல்கள் வ. எண், பாடல் ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads