சரூர்நகர் ஏரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சரூர்நகர் ஏரி (Saroornagar Lake) இது, இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஏரி. 1626 ஆம் ஆண்டில் அதன் உருவாக்கத்திலிருந்தே, 1956 ஆம் ஆண்டில் ஐதராபாத் விரிவடைந்தபோது இந்த ஏரியானது மிகவும் தூய்மையாக இருந்தது.[2] 99 ஏக்கர் (40 ஹெக்டேர்) பரப்பளவில் 2003-04 ஆம் ஆண்டில் ஐதராபாத் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் 200 மில்லியன் (அமெரிக்க $ 3.1 மில்லியன்) செலவில் இந்த ஏரி மீட்டெடுக்கப்பட்டது.[3] ஏரியின் மறுசீரமைப்பிற்குப் பிறகு, சில ஆண்டுகளுக்குப் பிறகு புலம்பெயர்ந்த பறவைகள் பெரிய எண்ணிக்கையில் ஏரிக்குத் திரும்பின.[1] மறுசீரமைப்புக்குப் பிறகு, ஆண்டுதோறும் விநாயக சதுர்த்தி அன்று விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவதால் ஏற்படும் மாசுபாட்டைத் தடுக்க, குடிமைப் பிரிவுகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.[4] மேலும், ஏரிக்கரை அருகே அனுமதியின்றி கட்டடம் கட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.[5] இருப்பினும், 2009 ஆம் ஆண்டளவில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் வடிகட்டுதல் அலகு முறையாக செயல்படுவதை நிறுத்தியது. இதனால், வீட்டுக் கழிவுகளால் ஏரி மாசடைந்து வருகிறது.[6]




Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
