சர்காகாட்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சர்காகாட் ( Sarkaghat ) என்பது இந்திய மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் மண்டி மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம், ஒரு நகர பஞ்சாயத்து மற்றும் வட்டமாகும்.
மண்டி மாவட்டத்தில் உள்ள 5 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சர்காகாட்டும் ஒன்றாகும். இமாச்சலப் பிரதேசம் 12 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சர்காகட் நகரம் மாவட்ட தலைமையக மண்டியிலிருந்து 60 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. சர்காகட் நகரம் மண்டி மாவட்டத்தின் ஒரு முக்கிய வணிக மையமாகும். மேலும் இது மாவட்டத்தின் பெரும்பான்மையான மக்களை கொண்டுள்ளது.
சர்காகட் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு 1981 இல் நடைமுறைக்கு வந்தது. நகர பஞ்சாயத்து சர்காகாட்டில் 7 வார்டுகள் உள்ளன. இந்த நகரத்தின் தற்போதைய மக்கள் தொகை சுமார் 6000 ஆகும்.
Remove ads
போக்குவரத்து
வான்வெளி
குலு மணாலி, விமான நிலையம் சர்ககாட்டில் இருந்து அருகிலுள்ள விமான நிலையமாகும்.
இரயில்
ஜோகிந்தர் நகர் ரயில் நிலையம் அருகிலுள்ள ரயில் நிலையம் ஆகும்.
நிலவியல்
இந்த நகரம் துணை வெப்பமண்டல காலநிலையைக் கொண்டுள்ளது . மேலும் வெப்பமான கோடை மற்றும் குளிர்ந்த குளிர்காலத்தால் வகைப்படுத்தப்படுகிறது. வெப்பநிலை 10 டிகிரி சி முதல் 45 டிகிரி சி வரை சூன் மாதத்துடன் வெப்பமாகவும், சனவரி மாதத்தை மிகவும் குளிரான மாதங்களாகவும் கொண்டுள்ளது. புவியியல் ரீதியாக சர்ககாட் நகரம் நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளது.
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads