சர்வ ஞானோத்தரம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சர்வ ஞானோத்திரம் என்பது ஒரு சைவசித்தாந்த நூல். 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. காலோத்தர ஆசிரியர் கி.பி. 1400ஐ ஒட்டி வாழ்ந்த ஒரு புலவர். இவரது இயற்பெயர் தெரியவில்லை. எனவே இவர் இயற்றிய நூல்களில் ஒன்றான தேவி காலோத்தரம் என்னும் நூலின் பெயரால் இவ்வாறு இந்த ஆசிரியரைக் குறிப்பிடுகிறோம். சர்வ ஞானோத்தரம் என்பது இவர் இயற்றிய மற்றொரு நூல்.

வடமொழியில் உள்ள உபாகம உப ஆகமம் சாத்திர நூல்களில் தேவி காலோத்தர ஆகமம், சர்வ ஞானோத்தர ஆகமம், கந்த காலோத்தர ஆகமம் என்பன சில. இவற்றில் முதல் இரண்டு வடமொழி ஆகமங்களை இவர் தமிழில் மொழிபெயர்த்து நூலாக்கியுள்ளார்.

வடமொழி சர்வ ஞானோத்தரம் 7 பிரகரணங்களையும் 240 சுலோகங்களையும் கொண்டது. தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சர்வ ஞானோத்திரம் 9 பிரகரணங்களையும், [1] 91 விருத்தங்களையும் கொண்டது. [2]

நூலில் வடசொல் பயில்வு மிகுதி.[3]

Remove ads

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, பதிப்பு 2005

அடிக்குறிப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads