சல்மா
இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழ் எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ரொக்கியா பேகம் என்கிற ராஜாத்தி சல்மா (Rajathi Salma) என்பவர் 1968-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள துவரங்குறிச்சி என்ற ஊரில் பிறந்த தமிழ் இஸ்லாமிய பின்னணி கொண்ட கவிஞர், எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதியாவார். சல்மா எழுதிய இரண்டாம் சாமங்களின் கதை, ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட பிறகு, ஏசியன் புக்கர் ப்ரைஸ் எனப்படும் மேன் ஏசியன் லிட்டெரரி விருதுக்காக தேர்வு செய்யப்பட்டிருந்ததன் காரணமாகத் தமிழ் இலக்கிய உலகில் பரவலாக அறியப்பட்டவர். தமிழ் படைப்பாளி ஒருவர் ‘ஏசியன் புக்கர் ப்ரைஸ்’க்கான லாங் லிஸ்ட்டில் தேர்வு செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.[1][2]
Remove ads
இளம்பருவம்
சல்மா 1968-ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி என்கிற ஊரில் சம்சுதீன், சர்புன்னிசா ஆகியோரின் மகளாகப் பிறந்தார். இவரது 13-ஆம் வயதில் தனது தோழிகளுடன் திரையரங்குக்குச் சென்று திரைப்படம் பார்த்த காரணத்தால் இவரது குடும்பத்தார் இவரைப் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கவில்லை. திராவிட இயக்க மரபு கொண்ட அப்துல் மாலிக் என்பவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். அதன்பின் கவிதைகள், கட்டுரைகள், கதைகள் எழுதத் தொடங்கினார். இவருக்குச் சலீம் ஜாஃபர், முஹம்மது நதீம் என இரண்டு புதல்வர்கள் உள்ளனர்.
Remove ads
அரசியல் வாழ்வு
சல்மா திருச்சி மாவட்டம், பொன்னம்பட்டி பேரூராட்சி மன்றத் தலைவராக இருந்துள்ளார். 2006-இல் மருங்காபுரி தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர், தமிழ்நாடு சமூகநல வாரிய தலைவியாக நியமனம் செய்யப்பட்டார்.[3] தி.மு.க.வில் மகளிர் அணி பிரச்சாரக்குழு செயலாளராகப் பணியாற்றி வருகிறார்.[4]
எழுதிய நூல்கள்
கவிதைத்தொகுப்பு
- சல்மாவின் 17-ஆம் வயதில் காலச்சுவடு பதிப்பகம் மூலமாக ஒரு மாலையும் இன்னொரு மாலையும் என்கிற முதல் கவிதைத் தொகுப்பு வெளியானது.[5] ஆங்கிலத்திலும் An Evening and Another Evening என்று மொழிபெயர்கப்பட்டுள்ளது.
- 2003-ஆம் ஆண்டு பச்சை தேவதை காலச்சுவடு பதிப்பகம் மூலம் வெளியிடப்பட்டது. Green Angel என்று ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[6]
புதினங்கள்
- இரண்டாம் ஜாமத்தின் கதைகள் (2004) The Hours Past Midnight என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மேலும் இந்தி, ஜெர்மன், கடாலன் ஆகிய மொழிகளிலும் மொழிப்பெயர்ப்பு வேலைகள் நடந்துவருகின்றன.[சான்று தேவை][சான்று தேவை]
- மனாமியங்கள் (2016) - இதுவும் ஆங்கிலத்தில் Dreams[7] என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
விருதுகள்
- மகாகவி கன்னையாலால் சேதியா அறக்கட்டளை சார்பில் பல்வேறு மொழிகளில் சிறந்து விளங்கும் கவிஞர்களுக்கு ஆண்டுதோறும் "மகாகவி கன்னையாலால் சேதியா விருது" வழங்கப்பட்டு வருகிறது. 2019-ஆம் ஆண்டிற்கான விருது கவிஞர் சல்மா அவர்களுக்கு வழங்கப்பட்டது.[8]
- திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் விருது (2018)[9] வழங்கப்பட்டது.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads