சவுமியா சுவாமிநாதன்
இந்திய சதுரங்க வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சவுமியா சுவாமிநாதன் (Soumya Swaminathan) என்பவர் ஓர் இந்தியப் பெண் சதுரங்க கிராண்ட்டு மாசுட்டர் ஆவார். இவர் 1989 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 21 ஆம் நாள் பிறந்தார். அர்கெந்தினாவின் பியூர்டோ மேட்ரினில் நடைபெற்ற உலக இளையோர் பெண்கள் சாம்பியன்பட்டத்தை 2009 ஆம் ஆண்டு சவுமியா வென்றார். இப்போட்டியில் தெய்சி கோரி மற்றும் பெட்டல் செம்ரே இல்டிசு ஆகியோருடன் சமநிலை புள்ளிகள் எடுத்து இவ்வெற்றியை ஈட்டினார் [1][2].
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
2005 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்திய இளையோர் பெண்கள் சாம்பியனாகவும் சவுமியா இருந்தார். 2011 ஆம் ஆண்டு சனவரியில் நடைபெற்ற 2011 ஆம் ஆண்டிற்கான இந்தியப் பெண்கள் சாம்பியன் பட்டத்தையும் இவர் வென்றார் [3]. சென்னையில் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் பெண்கள் சாம்பியன் போட்டியிலும் வெற்றி பெற்றார் [4]. 2016 ஆம் ஆண்டில், மாசுகோ சதுரங்கப் போட்டியின் பெண்கள் பிரிவில் அனசுதேசியா போட்நாரூக் மற்றும் அலெக்சாண்ட்ரா ஓபொலின்டெசுவா ஆகியோருடன் முதலிடத்தைப் பகிர்ந்து கொண்டார். சமநிலை முடிவு போட்டி ஆட்டத்தில் இரண்டாவதாக வந்தார் [5]. 2018 ஆம் ஆண்டு சூலை 26 முதல் ஆகத்து 4 வரை ஈரானின் அமாடனில் நடைபெற்ற ஆசிய அணி சதுரங்க சாம்பியன் பட்டப்போட்டியில் கட்டாயத் தலை துணி அணிய மறுத்ததற்காக இவர் அப்போட்டியில் பங்கேற்காமல் விலகினார்.[6].
Remove ads
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads