சாக்சி மாலிக்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாக்சி மாலிக் (Sakshi Malik, செப்டம்பர் 3, 1992) இந்திய மற்போர் வீராங்கனையாவார்.[1] இவர் கிளாஸ்கோவில் நடந்த 2014 பொதுநலவாய விளையாட்டுக்களில் பெண்கள் கட்டற்றவகை மற்போர் 58 கிலோ வகுப்பில் இந்தியா சார்பாக பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்றார்.[2] 2014இல் தாஷ்கந்தில் நடந்த உலக மற்போர் போட்டிகளிலும் 60 கிலோ வகுப்பில் பங்கேற்றார்.
Remove ads
2016 ஒலிம்பிக்
2016 ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடைப் பிரிவில், கிர்கிஸ்தான் வீராங்கனை ஐசுலு டைனிபிகோவா உடன் மோதி 8-5 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று சாக்சி வெண்கலப் பதக்கம் வென்றார். [3] [4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
