சாங்க்யும்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாங்க்யும் (Sanguem) நகரம் இந்தியாவின் கோவா மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு பகவான் மகாவீரர் காட்டுயிர்ச் சரணாலயம் மற்றும் மொல்லம் தேசியப் பூங்கா, சாகமேஷ்வர் கோயில் மற்றும் சலாயுலிம் அணை ஆகியவை அமைந்துள்ளன.
அமைவிடம்
இதன் அமைவிடம் 15.23°N 74.17°E ஆகும்.[1] இது கடல் மட்டத்திலிருந்து 22 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.
மக்கட்டொகை
2011 ஆம் ஆண்டின் மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் படி இந்நகரின் மொத்த மக்கட்டொகை 6,158 பேர் ஆகும்.[2] இங்கு ஆண்கள் 51% உம் பெண்கள் 49% உம் உள்ளனர். இந்நகரின் கல்வியறிவு 75% ஆகும். ஆண்களின் கல்வியறிவு 81% ஆகவும் பெண்களின் கல்வியறிவு 69% ஆகவும் உள்ளது. மக்கட்டொகையில் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 6% ஆவர். கொங்கணி, கன்னடா என்பன இங்கு பேசப்படும் முக்கிய மொழிகள் ஆகும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads