சாத்தந்தையார்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சாத்தந்தையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் 5 உள்ளன.

மேலதிகத் தகவல்கள் பாடல், திணை, துறை, பாடப்பட்டோர் ...
Remove ads

பாடல் சொல்லும் செய்திகள்

தித்தன் காண்க

கோப்பெருநற்கிள்ளி ஆமூர்ப் போரில் மல்லனோடு போரிடும் காட்சியைத் தித்தன் காண்பானாக! (தன் உறையூர் ஆட்சியை) நல்கினும், நல்காவிட்டாலும், பசியில் பணைமரத்தை ஒடிக்கும் யானை போலப் போரிடுவதைக் காண்பானாக! ஒரு காலை மண்டியிட்டுக்கொண்டு மற்றொரு காலால் பின்புறம் தாக்குவோரை உதைத்துக்கொண்டு போரிடுவதைக் காண்பானாக! என்கிறார் புலவர். (புறம் 80)

கவிகை மல்லன்

கோப்பெருநற்கிள்ளி கவிகை மல்லன் என்று காற்றப்படுகிறான். கடல் போன்ற அவன் படையும், இடிபோல் முழங்கும் யானைகளும் போர்க்களம் புகுந்துள்ளன. போரின் விளைவில் நம் இரக்கத்துக்கு ஆளாவோர் யார் என விளங்கவில்லையே! என்கிறார் புலவர். (புறம் 81)

கட்டில் நிணக்கும் இழிசினன்

மறுநாள் திருவிழா. இன்று மனைவி பிள்ளை பெற்றுள்ளாள். பெருமழை பொழிந்துகொண்டிருக்கிறது. இழிசினன் அவளுக்குக் கட்டில் பின்னுகிறான். அது தோல்கட்டில். ஊசியில் தோலை இழுத்துத் தைக்கிறான். அப்போது அவன் ஊசி தோலைத் தைப்பது போலக் கோப்பெருநற்கிள்ளியின் கை செயல்படுகிறதாம். (புறம் 82)

பிண்ட நெல்லின் தாய்மனை

காத்திருக்கும் தலைவனிடம் தோழி சொல்கிறாள். உயர்ந்த கூடு நிறைய நெல் இருக்கும் தாய்மனையை விட்டுவிட்டு உன்னோடு வரத் துடிக்கும் இவள் தவறு செய்கிறாளோ? இப்படி எண்ணி என்னை நானே நொந்துகொள்கிறேன், என்கிறாள். (நற்றிணை 26)

உயர்நிலை உலகம்

போர்க்களத்தில் துடி முழக்கும் புலையனே, கேள்! போர்க்களத்தில் எறிகோல் வளைதடி வீசும் இழிசினனே, கேள்! மாரி போல் அம்பு பாய்ந்தாலும், வயல்கெண்டை போல் வேல் தைத்தாலும், யானையே குத்தினாலும் போர்க்களத்தை விட்டு ஓடாதவர் உயர்நிலை உலகத்துத் தேவர் மகளிரோடு இன்பம் துய்ப்பர். (நானும் அதற்காக எதிர்நிற்கிறேன் என்கிறான் போர்கள வீரன்.) (புறம் 287)

Remove ads

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads