இக்கட்டு (சதுரங்கம்)
நகர முடியாத நிலை From Wikipedia, the free encyclopedia
Remove ads
சதுரங்கத்தில், இக்கட்டு அல்லது சாத்தியமான நகர்வற்ற நிலை (Stalemate) என்பது முற்றுகைக்காளாகாத வேளையில் ஒரு போட்டியாளரால் எந்தவோர் ஏற்றுக்கொள்ளக்கூடிய நகர்வையும் செய்ய முடியாத நிலை ஆகும்.[1] சாத்தியமான நகர்வற்ற நிலை ஏற்பட்டால் அப்போட்டி சமநிலையில் முடிவடையும்.[2] சதுரங்க விதிமுறைகளுள் சாத்தியமான நகர்வற்ற நிலையும் அடங்குகின்றது.
சாத்தியமான நகர்வற்ற நிலைக்கான எடுத்துக்காட்டு
| a | b | c | d | e | f | g | h | ||
| 8 | 8 | ||||||||
| 7 | 7 | ||||||||
| 6 | 6 | ||||||||
| 5 | 5 | ||||||||
| 4 | 4 | ||||||||
| 3 | 3 | ||||||||
| 2 | 2 | ||||||||
| 1 | 1 | ||||||||
| a | b | c | d | e | f | g | h | ||
நகர வேண்டிய கறுப்பினால் எந்தவொரு ஏற்றுக்கொள்ளக்கூடிய நகர்வையும் மேற்கொள்ள முடியாது. ஆகவே, இக்கட்டு நிலை ஏற்பட்டுப் போட்டி சமநிலையில் முடிவடைகிறது.
19ஆம் நூற்றாண்டிலேயே, சாத்தியமான நகர்வற்ற நிலை ஏற்பட்டால் போட்டி சமநிலையாக முடியும் எனும் விதி கொண்டு வரப்பட்டது.
சில சதுரங்க வகைகளில் சாத்தியமான நகர்வற்ற நிலையை ஏற்படுத்தும் நகர்வை மேற்கொள்ள முடியாது. முரண்சதுரங்கத்தில் சாத்தியமான நகர்வற்ற நிலை ஏற்பட்டால், அது சமநிலையாகக் கருதப்பட மாட்டாது.[3]
Remove ads
எளிய எடுத்துக்காட்டுகள்
முதலாவது உரு
| a | b | c | d | e | f | g | h | ||
| 8 | 8 | ||||||||
| 7 | 7 | ||||||||
| 6 | 6 | ||||||||
| 5 | 5 | ||||||||
| 4 | 4 | ||||||||
| 3 | 3 | ||||||||
| 2 | 2 | ||||||||
| 1 | 1 | ||||||||
| a | b | c | d | e | f | g | h |
1898இல் பர்னுக்கும் பில்சுபுரிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் கருப்பு நகர வேண்டியிருந்ததால் சாத்தியமான நகர்வற்ற நிலை ஏற்பட்டது.
இரண்டாவது உரு
மூன்றாவது உரு
நான்காவது உரு
Remove ads
ஆட்டத்தினிறுதியில் சாத்தியமான நகர்வற்ற நிலை
ஆனந்து எதிர் கிராம்னிக்கு
| a | b | c | d | e | f | g | h | ||
| 8 | 8 | ||||||||
| 7 | 7 | ||||||||
| 6 | 6 | ||||||||
| 5 | 5 | ||||||||
| 4 | 4 | ||||||||
| 3 | 3 | ||||||||
| 2 | 2 | ||||||||
| 1 | 1 | ||||||||
| a | b | c | d | e | f | g | h | ||
65.... Kxf5இற்கு முன்பு
2007 உலகச் சதுரங்கப் போட்டியில் விசுவநாதன் ஆனந்துக்கும் விளாடிமிர் கிராம்னிக்குக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில், கறுப்பானது f5இலுள்ள காலாளைக் கைப்பற்றிச் சாத்தியமான நகர்வற்ற நிலையை ஏற்படுத்தியது (வேறு எந்தவொரு நகர்வும் கறுப்பைத் தோல்வியடையச் செய்யும்.).[4]
கோர்ச்னோய் எதிர் கார்ப்பொவு
கோர்ச்னோய் எதிர் கார்ப்பொவு, 1978
| a | b | c | d | e | f | g | h | ||
| 8 | 8 | ||||||||
| 7 | 7 | ||||||||
| 6 | 6 | ||||||||
| 5 | 5 | ||||||||
| 4 | 4 | ||||||||
| 3 | 3 | ||||||||
| 2 | 2 | ||||||||
| 1 | 1 | ||||||||
| a | b | c | d | e | f | g | h | ||
124.Bg7இற்குப் பின்னரான நிலை
1978 உலகப் போட்டியில் விக்டர் கோர்ச்னோய்க்கும் அனத்தோலி கார்ப்பொவுக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியின் 124ஆவது நகர்வில் சாத்தியமான நகர்வற்ற நிலை ஏற்பட்டது. இங்கே, வெள்ளை அமைச்சர் பயனற்றது. அதனால் a8ஐத் தனது தாக்குதலின் கீழ் வைத்திருக்கவோ a4இல் உள்ள கறுப்புக் காலாளைத் தாக்கவோ முடியாது. வெள்ளை அரசன் கறுப்புக் காலாளை நோக்கிச் சென்றால் கறுப்பு அரசன் a8இற்குச் சென்று கோட்டையை அமைத்து விடும். ஆனாலும் இரு போட்டியாளர்களும் ஒப்பந்தம் மூலம் போட்டியைச் சமநிலையாக்க முன்வரவில்லை. சாத்தியமான நகர்வற்ற நிலைக்கு கார்ப்பொவை உட்படுத்தியமை தனக்கு மகிழ்ச்சியைத் தந்ததாக விக்டர் கோர்ச்னோய் குறிப்பிட்டார்.[5]
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads