சாத்து
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாத்து என்பது சார்ந்து செல்லும் வணிகர் கூட்டம்.
- பண்டங்களைக் கழுதையில் ஏற்றிக்கொண்டு அவர்கள் செல்வது வழக்கம். பல வழிகள் ஒன்றுகூடும் இடங்களில் இருந்துகொண்டு அரசனின் காவலர் ‘உல்கு’ என்னும் சுங்கவரி வாங்குவதோடு மட்டுமல்லாமல் சாத்து வணிகர்களுக்கு உதவியாகவும் இருப்பார்கள். [1]
- சாத்துக் கூட்டம் ஊரில் வந்து தங்கிய காலத்தில் பகைவர் தாக்க வந்தால் தண்ணுமை முழக்கி அவர்களைச் செல்லவேண்டாம் எனத் தடுப்பர்.[2]
- காட்டுத்தீ எரித்த இடங்களில் சாத்துக் கூட்டம் வழி தடுமாறும். அங்குப் புலியும் யானையும் தாக்கிக்கொள்ளும். [3]
- உப்பு வணிகச் சாத்து சமைத்து உண்ட அடுப்புத் தீயில் மழவர் கூட்டம் தமது கறித்துண்டுகளை சுட்டுத் தின்பர்.[4]
- சாத்துக் கூட்டத்துக்கு வழிப்பறி அச்சமும் உண்டு.[5]
- மதுரைக்குச் செல்லும் வழியில் கோவலனை வழிமறித்த ‘வனசாரியை’ என்னும் பெண் தெய்வம் தான் சாத்துக் கூட்டத்துடன் வந்து வழியில் தனிமைப்பட்டதாகக் கூறுகிறது. [6]
Remove ads
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads