சாத்ரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாத்ரா (Zatra) என்பது கோவாவில் உள்ள இந்துக் கோவில்களில் கொண்டாடப்படும் புனித யாத்திரைகளுக்கான கொங்கணி மொழிச் சொல்லாகும். இந்தி, மராத்தி மற்றும் நேபாளி ஆகிய மொழிகளிலிலும் இதற்குச் சமமான சொல்கள் காணப்படுகிறது. அவை யாத்திரை அல்லது ஜாத்ரா எனப்படுகிறது. மகாராட்டிராவில் உருசு என்ற மாற்று வார்த்தையும் பயன்படுத்தப்படுகிறது.
சாத்ராவின் போது, இந்து தெய்வம் அல்லது தெய்வங்களின் சிலை (கள்) அல்லது மூர்த்திகள் பல்லக்குகளில் அல்லது பெரியத் தேரில் சிறப்பு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன.
Remove ads
விழா
பாரம்பரியமாக, ஒவ்வொரு கோவிலும் ஆண்டுக்கு ஒரு முறை பாரம்பரிய நாளில் இந்த விழாவைக் கடைப்பிடிக்கிறது.[1] அனைத்து விழாக்களும் வழக்கமாக அக்டோபரில் தீபாவளிக்குப் பிறகு நிகழ்கின்றன. மார்ச் மாதத்தில் சிக்மோ அல்லது ஹோலி பண்டிகை வரை தொடர்கின்றன. கோவாவின் மிகவும் பிரபலமான சாத்ராவானது, பனஜியிலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சிர்கோவோவில் உள்ள இந்துக் கோயிலான லைராய் கோயிலிலும், பனஜியிலிருந்து சுமார் 50 கி.மீ மற்றும் மட்காவிலிருந்து 18 கி.மீ. தூரமுள்ள கியூபெம் வட்டத்தி படோர்பா என்ற கிரமத்திலுள்ள சாந்ததுர்கா என்றா தெய்வத்திற்கும் நடக்கிறது. இந்த சாத்ராக்களை அதன் மற்ற வணிக மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்காக கும்பமேளாவுடன் ஒப்பிடலாம்.
Remove ads
பிரபல உணவு
சாத்ராவின் போது விற்கப்படும் மற்றும் உட்கொள்ளும் பிரபலமான தின்பண்டங்களாக லட்டு மற்றும் காஜே ஆகியவை இருக்கிறது. அவை வறுத்த கொண்டைக்கடலை மாவுடன் வெல்லம் மற்றும் எள் கலவையில் நனைத்து வழங்கப்படுகின்றன.
பிற இடங்களில்
கோவாவுக்கு வெளியே, மிகவும் பிரபலமான சாத்ரா என்பது இந்தியாவின் ஒடிசாவின் புரி ஜெகன்நாதர் கோயில் தேரோட்டம் ஆகும். இது ஜுகர்நாத் என்ற வார்த்தையை ஆங்கில மொழியில் பங்களித்தது.
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads