சாந்தினி தமிழரசன்

நடிகை From Wikipedia, the free encyclopedia

சாந்தினி தமிழரசன்
Remove ads

சாந்தினி தமிழரசன் (Chandini Tamilarasan) என்பவர் இந்தியத் தமிழ் நடிகை ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்குநர் பாக்யராஜின் சித்து+2 (2010) படம் மூலம் அறிமுகமானார். (2010), நான் ராஜாவாகப் போகிறேன் (2013) என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்..

விரைவான உண்மைகள் சாந்தினி தமிழரசன், பிறப்பு ...
Remove ads

தொடக்க கால வாழ்வு

இவர், தமிழரசன் (தந்தை) என்பவருக்கும், பத்மாஞ்சலி (தாய்) என்பவருக்கும் மகளாகப் பிறந்தவர் ஆவார். சென்னை, நுங்கம்பாக்கத்தில் வளர்ந்த இவர் அண்ணா சாலை, சர்ச் பார்க், தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் படித்தார். சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரியில் காட்சித் தொடர்பியல் பாடத்தில் தனது இளங்கலைப் பட்டம் பயின்றார்.

தொழில் வாழ்க்கை

இவர் தனக்கு 17 வயதாகும் போது, 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற சென்னை அழகிப்போட்டியில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார். ஆனால், முதல் மூன்று இடங்களில் தேர்வாகவில்லை.[2] அதன் பிறகு 2009 ஆம் ஆண்டில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இதன் பிறகு இயக்குநர் பாக்யராஜிடம் இருந்து அழைப்பு வந்து தனது புதிய முயற்சிக்காக திரைத்துறைக்கான தோற்ற அமைப்பு சோதனையில் கலந்து கொண்டார்.[3][4] பின்னதாக அவர் பாக்யராஜிடம் தனது திறமையை நிரூபித்து சித்து +2 திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இத்திரைப்படத்தில் பாக்யராஜின் மகன் சாந்தனு பாக்யராஜ் உடன் கதாநாயகியாக நடித்தார். இத்திரைப்படம் சிறிது தாமதத்திற்குப் பின் திசம்பர் 2010 இல் திரைக்கு வந்தது. சராசரியான விமர்சனங்களைப் பெற்ற இத்திரைப்படம் வசூலில் மிகவும் பின்தங்கியே இருந்தது.[5] 2010 ஆம் ஆண்டின் நடுவில் அவர் படித்துறை என்ற புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தமானார். இத்திரைப்படத்தில் புதியவர்கள் அறிமுகமாக படத்தை முன்னணி நடிகர் ஆர்யா தயாரித்தார். இப்படம் திரைக்கு வரவில்லை.[6] இவருக்கு நிறைய வாய்ப்புகள் வந்த போதிலும், அவற்றை மறுத்து விட்டு தனது படிப்பைத் தொடர்ந்து முடிக்க கல்லூரிக்குச் சென்றார்.[7] தனது பட்டப்படிப்பை 2014 ஆம் ஆண்டில் முடித்தார்..[8]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads