சான் டியேகோ காமிக்-கான்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

சான் டியேகோ காமிக்-கான் அல்லது காமிக்-கான் இன்டர்நேஷனல் (ஆங்கிலம்: San Diego Comic-Con) என்பது அமெரிக்க நாட்டு காமிக் புத்தக மாநாடு மற்றும் இலாப நோக்கற்ற[2] பல வகை பொழுதுபோக்கு நிகழ்வு ஆகும். இது 1970 ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சான் டியேகோவில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதன் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள பெயர், காமிக்-கான் இன்டர்நேஷனல்: சான் டியேகோ ஆனால் இது பொதுவாக காமிக்-கான் அல்லது சான் டியேகோ காமிக்-கான் அல்லது சாடிகாகா என அழைக்கப்படுகிறது.[3][4]

விரைவான உண்மைகள் நிகழ்நிலை, வகை ...

இது 1970 இல் ஷெல் டோர்ஃப், ரிச்சர்ட் ஆல்ஃப், கென் க்ரூகர், ரான் கிராஃப் மற்றும் மைக் டவ்ரி[5][6][7][8][9] ஆகியோர் அடங்கிய சான் டீகன்ஸ் குழுவால் கோல்டன் ஸ்டேட் காமிக் புக் கன்வென்ஷனாக இந்த மாநாடு நிறுவப்பட்டது. பின்னர் இது சான் டியாகோ காமிக் புத்தக மாநாடு என்று பெயர் மாற்றப்பட்டு அழைக்கப்பட்டது. இந்த மாநாடு சான் டியாகோவில் உள்ள சான் டியாகோ கன்வென்ஷன் சென்டரில் கோடையில் (ஜூலையில் 2003 முதல்) நான்கு நாள் நிகழ்வாக (வியாழன்-ஞாயிறு) நடைபெறும். அத்துடன் இந்த மாநாட்டில் உத்தியோகபூர்வ திறப்புக்கு முந்தைய புதன்கிழமை மாலை முதல் நான்கு நாட்களிலும் பல வல்லுநர்கள், கண்காட்சியாளர்கள் மற்றும் முன் பதிவுசெய்யப்பட்ட விருந்தினர்கள் நிகழ்விற்கு முந்தைய "முன்னோட்ட இரவு" நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம்.

இந்த காமிக்-கான் நிறுவனம் 1974 ஆம் ஆண்டு முதல் வருடாந்திர இன்க்பாட் விருதை விருந்தினர்கள் மற்றும் பிரபலமான கலைத் தொழில்களில் ஆர்வமுள்ள நபர்களுக்கும் காமிக்-கானின் இயக்குநர்கள் குழு மற்றும் மாநாட்டுக் குழு உறுப்பினர்களுக்கும் வழங்கி வருகிறது. இது வில் ஈஸ்னர் விருதுகளின் இல்லமாக கருதப்படுகின்றது.

இந்த மாநாட்டில் முதலில் முதன்மையாக காமிக் புத்தகங்கள் மற்றும் அறிவியல் புனைகதை/கற்பனை தொடர்பான திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் இதே போன்ற பிரபலமான கலைகளைக் காட்சிப்படுத்திய திகில், மேற்கத்திய இயங்குபடம், அனிமே, மங்கா, பொம்மைகள் உட்பட கிட்டத்தட்ட அனைத்து வகைகளிலும் பரவலர் பண்பாடு மற்றும் பொழுதுபோக்கு கூறுகள் போன்றவை சேர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் அட்டை விளையாட்டுகள், நிகழ்பட ஆட்டம், இணையவரைகதைகள் மற்றும் கனவுருப்புனைவு நாவல்களும் காட்ச்சிப்படுத்தப்படும். 2010 மற்றும் ஒவ்வொரு ஆண்டும், 130,000க்கும்[10] அதிகமான பங்கேற்பாளர்களுடன் சான் டியாகோ மாநாட்டு மையத்தில் பங்குகொள்வாரக்ள். பெரும் கூட்டத்தை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல், உலகின் மிகப்பெரிய வருடாந்திர காமிக் மற்றும் பாப் கலாச்சார விழா உட்பட பல கின்னஸ் உலக சாதனைகளை இந்நிகழ்வு கொண்டுள்ளது.[11] கோவிட்-19 பெருந்தொற்றுநோய் காரணமாக இந்த நிகழ்வு இரண்டு முறை ரத்து செய்யப்பட்டது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads