சாம்சர் சிங் மனாசு
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாம்சர் சிங் மனாசு (Shamsheer Singh Manhas, 4 சனவரி 1960 – 20 சனவரி 2025)[1] இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சம்மு நகரத்தில் 1960 ஆம் ஆண்டு சனவரி மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சம்மு & காசுமீர் அரசியலில் பாரதிய சனதா கட்சி உறுப்பினராகச் செயல்பட்டார். இயனக் சிங்கின் மகனாக அறியப்படும் இவர் ஒரு விவசாயியாகவும் சமூக சேவையாளராகவும் அறியப்படுகிறார். சம்மு மற்றும் காசுமீர் ஒன்றியப் பிரதேசத்தில் வலதுசாரி அரசியல் சித்தாந்தத்தின் புத்துணர்ச்சியாளராகவும் கருதப்படுகிறார். நீண்ட காலமாக இராசுட்ரிய சுயம்சேவாக் சங்கத்தின் தீவிர பிரச்சாரகராக இருந்து வருகிறார், பிராந்தியத்தில் ஒரு சக்திவாய்ந்த அரசியல்வாதியாக அறியப்படும் இவர் ஒரு விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார்.
சாம்சர் சிங் மனாசு சம்மு காசுமீர் அரசியலில் நன்கு அறியப்பட்ட ஆளுமையாக பாரதிய சனதா கட்சியின் மாநிலத் தலைவராகப் பணியாற்றியுள்ளார்.[2][3] 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பாரதிய சனதா கட்சி உறுப்பினராக சம்மு மற்றும் காசுமீர் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] சாம்சர் சிங் மனாசு 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதியன்று ஓய்வு பெற்றார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads