சாம வேதம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாம வேதம் (சமஸ்கிருதம்: सामवेद, sāmaveda, sāman "பாடல்கள்" + veda "அறிவு" ),[1] என்பது இந்துசமயத்தின் அடிப்படை நூல்களாகக் கருதப்படுகின்ற நான்கு வேதங்களில், பொது வழக்கில் மூன்றாவதாகக் குறிப்பிடப்படும் வேதமாகும். இது 1549 செய்யுள்களைக் கொண்டது. அவற்றுள் 75 செய்யுள்கள் இருக்கு வேதத்திலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும்.[2] இவ்வேதத்தின் திருத்திய மூல பதிப்புகள் மூன்று மட்டுமே தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன.[3]
இவ்வேதம் இருக்கு வேத காலத்தில் குறிப்பாக இறுதி இருக்கு வேத காலப்பகுதியில் (பொ.ஊ.மு. 1200 அல்லது 1000) தோற்றம் பெற்று யசுர் வேதம் மற்றும் அதர்வண வேத காலத்தில் முழுமையடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.[4]
இவ்வேதம் உள்ளடக்கியிருக்கும் சாந்தோக்கிய உபநிடதம் மற்றும் கேன உபநிடதம் எனும் பகுதிகள் இந்து மெய்யியலில் குறிப்பாக வேதாந்தத்தில் முக்கிய இடத்தை வகிக்கின்றன.[5] இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடனம் ஆகியவை சாம வேதத்தில் இருந்தே தோற்றம் பெற்றன என பொதுவாக கருதப்படுகிறது.[6]
Remove ads
வெளி இணைப்புகள்
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads