சார்லமேன்

From Wikipedia, the free encyclopedia

சார்லமேன்
Remove ads

சார்லமேன் (Charlemagne - 742 – 28 ஜனவரி 814) பிராங்குகளின் அரசராவார். இவர் கிபி 768 முதல் 814ல் இறக்கும் வரை ஆட்சியில் இருந்தார். இவர் பிராங்கு அரசுகளை, மேற்கு ஐரோப்பா, மத்திய ஐரோப்பா ஆகியவற்றில் பெரும் பகுதிகளை உள்ளடக்கிய ஒரு பெரிய பிராங்கியப் பேரரசு ஆக்கினார். இவரது ஆட்சிக் காலத்தில் இத்தாலியைக் கைப்பற்றிய இவர், கிபி 800 டிசம்பர் 25 ஆம் நாள் பேரரசர் அகஸ்டஸ் என்னும் பெயருடன், திருத்தந்தை மூன்றாம் லியோவினால் முடிசூட்டப்பட்டார். இவர் கான்ஸ்டன்டினோப்பிளில் அமைந்திருந்த பைசன்டைன் பேரரசருக்குப் போட்டியாக விளங்கினார். கத்தோலிக்கத் திருச்சபை ஊடாக கலை, மதம், பண்பாடு ஆகியவற்றில் ஏற்பட்ட கரோலிங்கிய மறுமலர்ச்சிக்கும் இவரது ஆட்சி காரணமாக அமைந்தது. இவரது வெளிநாட்டுக் கைப்பற்றல்களும், உள்நாட்டில் ஏற்படுத்திய சீர்திருத்தங்களும், மேற்கு ஐரோப்பாவிற்கும், மத்திய காலத்துக்கும் ஒரு வரைவிலக்கணத்தைக் கொடுத்தன. பிரான்ஸ், ஜேர்மனி, புனித ரோமப் பேரரசு ஆகியவற்றின் அரசர்கள் பட்டியலில் இவர் முதலாம் சார்ல்ஸ் எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

விரைவான உண்மைகள் பெரிய சார்லமேன், புனித உரோமை பேரரசர் ...
விரைவான உண்மைகள் அருளாளர் சார்லஸ் அகஸ்டுஸ்சார்லமேன், வணங்கும் திருஅவைகள் ...

இவர், குட்டைப் பிப்பின் என அழைக்கப்பட்ட பிராங்குகளின் அரசனுக்கும், லாவோனின் பெட்ராடா என்னும் அவரது மனைவிக்கும் மகனாகப் பிறந்தார். தந்தைக்குப் பின் தனது உடன்பிறந்தானான முதலாம் கார்லோமன்னுடன் கூட்டாக ஆட்சி நடத்தி வந்தார். பின்னர் சார்லமேனுக்கும், கார்லோமனுக்கும் இடையில் போர் ஏற்படுமளவுக்குப் பிணக்கு ஏற்பட்டதாயினும், 771ல் கார்லோமன் இறந்துவிட்டதனால் போர் தவிர்க்கப்பட்டது. சார்லமேன் கத்தோலிக்கத் திருச்சபை குறித்துத் தனது தந்தையின் கொள்கைகளையே கடைப்பிடித்து வந்ததுடன் அதன் காவலனாகவும் இருந்தார். இதற்காக இத்தாலியில் ஆட்சியிலிருந்த லொம்பார்டுகளை ஆட்சியில் இருந்து அகற்றியதுடன், ஸ்பெயினில் இருந்து இவரது ஆட்சிக்குத் தொல்லை கொடுத்துவந்த சரசென்களுடனும் போராடினார். இப் போர்களில் ஒன்றிலேயே இவர் தனது வாழ்நாளின் பெரும் தோல்விகளுள் ஒன்றைச் சந்தித்தார். ரான்செஸ்வயஸ் சண்டை (Battle of Roncesvalles) என அழைக்கப்பட்ட இப் போர் ரோலண்டின் பாடலில்]] நினைவு கூரப்பட்டுள்ளது. இவர் கிழக்குப் பகுதிகளிலிருந்த மக்களுக்கு, சிறப்பாக சக்சன்களுக்கு எதிராகவும் படையெடுப்புக்களை மேற்கொண்டு, நீண்டகாலப் போருக்குப் பின் அவர்களையும் தனது ஆட்சிக்குள் கொண்டுவந்தார். கட்டாயப்படுத்திக் கிறிஸ்தவத்துக்கு மதம் மாற்றியதன் மூலம் அவர்களைத் தனது ஆட்சிக்குள் ஒன்றிணைத்தார்.

இன்று இவர் பிரான்ஸ், ஜேர்மனி ஆகியவற்றின் முடியாட்சிகளின் தந்தையாக மட்டுமன்றி, ஐரோப்பாவின் தந்தையாகவும் கருதப்படுகிறார். ரோமர்களுக்குப் பின்னர் இவரது பேரரசே பெரும்பாலான மேற்கு ஐரோப்பியப் பகுதிகளை ஒன்றிணைத்தது. அத்துடன் கரோலிங்கன் மறுமலர்ச்சி மூலம் ஐரோப்பாவுக்கு ஒரு பொது அடையாளம் ஏற்படுவதற்கும் வழி வகுத்தது.

Remove ads

பிறப்பு

சார்லமேனின் பிறந்த தேதி பல்வேறு மூலங்களில் இருந்து கணிக்கப்பட்டவை. இவரின் பிறந்த ஆண்டு கி.பி. 742ஆம் ஆண்டு என கணிக்கப்பட்டது. இவர் ஜனவரி 814ஆம் ஆண்டில் தனக்கு 72 அகவையாகும் போது இறந்தார் என்பதால் இவரின் பிறப்பாண்டு கி.பி. 742ஆம் ஆண்டு என கணிக்கப்பட்டது. ஆனால் இம்முறையின் படி இவர் தன் பெற்றோர்களுக்கு திருமணமான கி.பி. 744ஆம் ஆண்டுக்கு இரண்டு ஆண்டுகள் முன் பிறந்தவாகிறார். அயனாட் என்பவர் இவரின் பிறந்த ஆண்டு கி.பி. 747 எனக் கணித்தார். ஆனால் இம்முறையிலும் சில குழப்பங்கள் உண்டு. மேலும் இலார்சு அபெய் என்பவர் ஏப்ரல் மாதம் இரண்டாம் நாள் இவர் பிறந்ததாக கணித்தார்.[2]

இவர் பிறந்த இடத்திலும் பிறந்த தேதி போலவே குழப்பங்கள் உள்ளன. சிலர் இவர் பெல்ஜியம் நாட்டின் இலெய்கு நகரில் பிறந்தார் எனக் கூறுகின்றனர்.[3] இவர் பிறந்ததாக ஆச்சென், துரென், காட்டிங்கு, முர்லென்பாச்சு போன்ற இடங்களும் கூறப்படுகின்றன.[4]

Remove ads

குடும்பம்

குடும்பம் மற்றும் வாரிசுகள்

சார்லமேனுக்கு தனது பத்து மனைவிகள் அல்லது துணைவிகளில் எட்டு பேருக்கு பிறந்த பதினெட்டு குழந்தைகள் இருந்தனர்.[5] ஆயினும்கூட, அவருக்கு நான்கு முறைமனப்பேரன்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் ஒருவர்தான் நான்காவது பேரன் லூயிஸ். சார்லமேனுக்கு கூடுதலாக ஒரு பேரனும் இருந்தார். (இத்தாலியின் பெர்னார்ட், அவரது மூன்றாவது மகன், இத்தாலியின் பிப்பின் என்பவனின் ஒரே மகன்), அவர் சட்டப்படி ஏற்கப்படதவராவார். ஆயினும் அவரது பிறப்பு சார்லமேனின் பரம்பரை வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது. அவருடைய சந்ததியினரில் பல ராஜ வம்சங்கள், ஆப்சுபர்கு , காப்டியன் மற்றும் பிளாண்டாசெனட்டு ஆகிய அரச மரபுகளைச் சேர்ந்தவர்களாவா்.

மேலதிகத் தகவல்கள் தொடக்க தேதி, திருமணங்கள் மற்றும் வாரிசுகள் ...
Remove ads

இறப்பு

கி. பி. 813ஆம் ஆண்டு தன் மகனும் அகுவடெயினின் மன்னனுமான இலூயிசு தி பியோசுக்கு தன் அரண்மனைக்கு வருமாறு சார்லமேன் அழைத்தார். அவனுக்கு மகுடம் சூட்டுவித்து தன் இணை அரசன் என அறிவித்து அகுவடெயினுக்கு அனுப்பி வைத்தார். தன் பொழுதைக் கழிப்பதற்காக வேட்டையாடுதலில் ஈடுபட்டிருந்தார். சில நாட்களில் நோய்வாய்பட்டு ஜனவரி 21 அன்று படுக்கையில் விழுந்தார்.[8] ஒரு வாரமாக உயிருக்குப் போராடி ஜனாரி 28 அன்று உயிர்நீத்தார். இறந்த நாளன்றே அச்சென் கதெட்ரல் புனித ஆலயத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.[9] இவர் அடக்கம் செய்யப்பட்ட காலத்தால் மறைந்து போனது. இவரின் கல்லறை புனித உரோமப் பேரரசின் மன்னனான மூன்றாம் ஓட்டோவால் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இவர் அந்த கல்லறைக்கு மேலேயே தன் ஆசனத்தை அமைத்திருந்தார். கி. பி. 1165ஆம் ஆண்டு புனித உரோமப் பேரரசின் மன்னனான முதலாம் பெட்ரிக்கால் இவரின் சவப்பெட்டி கதெட்ரலின் தரைக்கு அடியில் புதைக்கப்பட்டது.[10] இவரின் இறப்பு இவரைச் சார்ந்தவைகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.[11] சார்லமேனுக்கு பின்னர் அவரது மகனான இலூயிசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இவருக்கு பின் வந்த தலைமுறையோடு சார்லமேன் வழிவந்தவர்களின் ஆட்சி சிதறியது. இலூயிசின் மகன்கள் தங்களுக்குள் ஆட்சிப் பகுதிகளை பிரித்துக் கொண்டு சில கட்டுப்பாடுகளையும் விதித்தனர். இவை ஜெர்மனி என்று ஒரு மாகாணம் உருவாகக் காரணமாய் அமைந்தது.[12]

மேற்கோள்களும் குறிப்புகளும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads