சார்லி எப்டோ
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சார்லி எப்டோ (Charlie Hebdo, பிரெஞ்சு உச்சரிப்பு: [ʃaʁli ɛbdo]; மாற்று ஒலிப்பு: சார்லி ஹெப்ஃடோ, பொருள்: வாராந்திர சார்லி) பிரான்சிய அங்கத வாராந்தர செய்தியிதழாகும். பல கேலிச்சித்திரங்களும் அறிக்கைகளும் சமய நம்பிக்கைகளுக்கு எதிரான வாதங்களும் நகைச்சுவைத் துணுக்குகளும் இதில் வெளியாகின்றன. வழிபாடுகளற்ற, வழமைகளுக்கெதிரான தொனியுடன் இந்த இதழ் இடது-சாரி மற்றும் சமயங்களுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்கின்றது.[2] பிரான்சிய அரசியலில் மிகுந்த வலதுசாரி கருத்துக்கள், கத்தோலிக்கம், இசுலாம், யூதம், பண்பாடு குறித்த விமர்சனக் கட்டுரைகளை வெளியிடுகின்றது. முன்னாள் ஆசிரியர் இசுடெபானெ சார்போன்னியெ (சார்பு) கூற்றுப்படி "இடதுசாரி பன்முகத்தின் அனைத்துக் கூறுகளையும், விடுபட்டவைகளையும் கூட" இந்த இதழின் பார்வைக்கோணம் கொண்டுள்ளது.[3]
1970இல் துவங்கிய இந்த இதழ் 1981இல் மூடப்பட்டது; 1992இல் மீண்டும் வெளிவரத்தொடங்கியது. 2009இலிருந்து சார்பு இதன் ஆசிரியராக பொறுப்பிலிருந்தார்; 2015இல் இதழின் அலுவலகங்கள் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தார். இவருக்கு முன்னதாக பிரான்சுவா கவன்னாவும் (1969–1981) பிலிப்பு வாலும் (1992–2009) ஆசிரியர்களாக இருந்துள்ளனர்.
இது ஒவ்வொரு புதன் கிழமையும் வெளியாகின்றது; சிறப்புப் பதிப்புகள் நடுநடுவே வெளியிடப்படுகின்றன.
சனவரி 7, 2015 அன்று செய்தி இதழின் பாரிசு அலுவலகத்தில் வாராந்தர ஆசிரியக்குழு சந்திப்பின்போது இசுலாமியத் தீவிரவாதிகள் என ஐயுறப்படும் நபர்கள் பல ஒருங்கிணைப்பாளர்களையும் வருகையாளர்களையும் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர்; இரண்டு காவல்துறையினரையும் சுட்டுக் கொன்றனர்.[4][5][6]
இந்த இதழ் மீது இரண்டு முறை தீவிரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன: 2011இல் தீக்குண்டு, 2015இல் துப்பாக்கிப் படுகொலை.
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்சான்றுகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads