சாலம்பைக்குளம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
8°45′19″N 80°23′14″E சாலம்பைக்குளம் வவுனியாவில் முஸ்லீம்களைப் பெரும்பான்மையாக் கொண்ட ஏ30 வீதியின் அருகில் அமைந்துள்ள ஓர் கிராமம் ஆகும். வட இலங்கை முஸ்லீம்களின் கட்டாய வெளியேற்றம் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை அடுத்து 90களில் 160 குடும்பங்கள் அளவில் தங்கியிருந்த இக்கிராமத்தில் 2004ஆம் ஆண்டுன் 4 குடும்பமே மீளக்குடியமர்ந்துள்ளது. இக்கிராமத்தில் உள்ளவர்கள் பெரும்பாலும் அனுராதபுரம் சாலியபுரம் (அல்லது சிங்களத்தில் சாலியபுர) பகுதியில் குடிபெயர்ந்துள்ளனர். இக்கிராமத்தில் அல் அக்ஷயா மகாவித்தியாலம் பாடசாலையும் அமைந்துள்ளது. வவுனியா மன்னார் வீதியில் வடக்கு பக்கமாக பெருமளவு கண்ணிவெடிகளை சர்வாத்திரா என்னும் இந்திய மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் பிரிவினரால் கண்டெடுக்கப்பட்டு அழிக்கப்பட்டு இடம் அதிகாரப்பூர்வமாக 2004 ஆம் ஆண்டு வவுனியாவின் அன்றைய அரச அதிபர் திரு கணேஷிடம் கையளிக்கப்பட்டது. கண்ணிவெடியகற்றும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் கண்ணிவெடி அபாயக் கல்வி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் பொதுமக்களை மக்களை மீளக் குடியமர்த்த மேற்கொண்ட முயற்சிகள் வடக்குக் கிழக்கில் தொடரும் வன்முறைகளால் பெரிதும் பலனளிக்கவில்லை.
| இது இலங்கை-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் . |
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையைப் புதுப்பிக்கவும். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
