சாவகம் மீதான மங்கோலியப் படையெடுப்பு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாவகம் மீதான மங்கோலியப் படையெடுப்பு (ஆங்கிலம்: Mongol invasion of Java) என்பது குப்லாய் கானின் தலைமையிலான யுவான் அரச மரபானது 1292-ஆம் ஆண்டு தற்போதைய இந்தோனேசியாவில் உள்ள சாவகம் தீவின் மீது படையெடுத்த நிகழ்வைக் குறிப்பதாகும். இதில் 20,000[1] - 30,000 வீரர்கள் யுவான் அரச மரபால் பயன்படுத்தப்பட்டனர்.
சிங்காசாரியின் கீர்த்தநகரன் யுவானுக்குத் திறை செலுத்த மறுத்ததுடன் யுவானின் தூதுவர்களில் ஒருவரை ஊனமாக்கினார். இதற்குத் தண்டனை கொடுக்கும் போர்ப் பயணமாக இந்தப் படையெடுப்பு நிகழ்த்தப்பட்டது. எனினும் கீர்த்தநகரனின் மறுப்பு மற்றும் யுவான் வீரர்கள் ஜாவாவுக்கு வருகை புரிந்தது ஆகியவற்றுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் கீர்த்தநகரன் கொல்லப்பட்டார். சிங்கசாரியின் அரியணையைக் கேடிரி கைப்பற்றியது.
எனவே அதற்குப் பதிலாக யுவான் போர்ப் பயணப் படையானது அப்போது ஆட்சிக்கு வந்திருந்த அரசான கேடிரியின் அடிபணிந்த நிலையைப் பெற ஆணையிடப்பட்டது. ஆக்ரோஷமான படையெடுப்புக்குப் பிறகு கேதிரி சரணடைந்தது. ஆனால் யுவான் படைகளின் கூட்டாளியான ராதன் விஜயன் தலைமையிலான மயாபாகித்து அவர்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தது. இறுதியில் இந்தப் படையெடுப்பானது யுவானின் தோல்வியில், புதிய அரசனான மயாபாகித்தின் வெற்றியில் முடிந்தது.
Remove ads
மேலும் காண்க
உசாத்துணை
மேலும் படிக்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads