சாவுப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சாவுப் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா (Death Valley National Park) என்பது சியெரா நெவேடாவுக்குக் கிழக்கே வரண்ட காலநிலையைக் கொண்ட ஐக்கிய அமெரிக்காவின் பெரும் வடிநிலத்தில் (Great Basin) அமைந்துள்ள ஒரு தேசியப் பூங்கா ஆகும். இப் பூங்காவின் பகுதிகள் கிழக்குக் கலிபோர்னியாவில் உள்ள இன்யோ கவுன்டியின் தெற்குப் பகுதியிலும், சான் பேர்னாடினோ கவுன்டியின் வடக்குப் பகுதியிலும் உள்ளன. இப் பூங்காவின் சிறிய பகுதிகள், நியே கவுன்டியின் தென்மேற்குப் பகுதியிலும், நெவாடாவில் உள்ள எசுமெரால்டா கவுன்டியின் தெற்குக் கோடியிலும் அமைந்துள்ளன. இவைதவிரப் பூங்காவின் தனித்த பகுதியொன்று (பேய்க் குழி) தெற்கு நியே கவுன்டியினுள் அமைந்துள்ளது. 13,630 கிலோ மீட்டர்கள் (5,262 சதுர மைல்) பரப்பளவு கொண்ட இப் பூங்கா, உப்புப் பள்ளத்தாக்கு (Saline Valley), பனாமின்ட் பள்ளத்தாக்கின் (Panamint Valley) பெரும்பகுதி, ஏறத்தாள முழுமையான சாவுப் பள்ளத்தாக்கு, பல மலைத் தொடர்களின் பகுதிகள் என்பவற்றைத் தன்னுள் அடக்கியுள்ளது.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads