சா. தேவதாஸ்

தமிழ் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சா. தேவதாஸ் தமிழ் எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும், விமர்சகரும் ஆவார். பபானி பட்டாச்சார்யாவின் "லடாக்கிலிருந்து கவிழும் நிழல்" என்ற நாவலை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்ததற்காக 2014ஆம் ஆண்டின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. [1][2]

விருதுநகர் மாவட்டம் நடையனேரியைச் சேர்ந்த சா. தேவதாஸ் இராசபாளையத்தில் வசித்து வருகிறார். 1975 - 77 காலகட்டத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முதுகலை பயின்ற இவர் கூட்டுறவுத் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இதுவரை இருபத்தைந்து நூல்களை மொழிபெயர்த்திருப்பதோடு ஆறு கட்டுரை நூல்களையும் எழுதியுள்ளார்.[1][2][3]

Remove ads

கட்டுரை நூல்கள்

  • சா.தேவதாஸ் கட்டுரைகள் (1993)
  • மறுபரிசீலனை (2001)
  • 'மூன்றாவது விழியின் முதலாவது பார்வை (2002)
  • சூரிய நடனம்: விளிம்பு நிலைப் பிரதிகள் (2007)
  • அமர்தியா சென் (2008)
  • சார்லஸ் டார்வின், பரிணாமத்தின் பரிமாணங்கள் (2010)
  • புதிர்களை விடுவித்தல் (2010)
  • இலக்கிய ஆளுமைகளும் பிரதிகளும் (2010)
  • எனது எழுத்து எனது சாட்சியம் (2017)
  • ஆல்பெர் காம்யு: நூற்றாண்டு நாயகன் (2014)
  • மரணதண்டனையின் இறுதித் தருணங்கள் (2016)

மொழிபெயர்ப்புகள்

  • புன்னகை புரியும் இளவரசி, இந்தியச் சிறுகதைகள் (1995)
  • பகத்சிங் சிறைக்குறிப்புகள் (1995)
  • கதாசாரகம், சர்வதேச வாய்மொழிக் கதைகளின் தொகுப்பு (1999)
  • குளிர்கால இரவில் ஒரு பயணி, இடலோ கல்வினோ (2001)
  • புலப்படாத நகரங்கள், ஈடலோ கல்வினோ (2003)
  • சேகுவேராவின் கொரில்லா யுத்தம் (2003)
  • பீட்டர்ஸ்பர்க் நாயகன், ஜே. எம். கூட்ஸி (2004)
  • பிளாடெரோவும் நானும் ஜுவான் ரமோன் ஜிமெஜெஸ் (2005)
  • காஃப்காவின் கடிதங்கள், கதைகள், கட்டுரைகள் (2006)
  • டாலியின் டைரி (2006)
  • விஜயநகரச் பேரசசு( Forgotten Empire of Vijay Nagar)(2006)
  • ஒன்று கலந்திடும் விதிகளின் கோட்டை, இடலோ கல்வினோ (2006)
  • யூதப் பறவை (2007)
  • செவ்விந்தியரின் நீண்ட பயணம், பெர்னார்ட் மலமூட் (2008)
  • லியோனார்டோ டாவின்ஸி குறிப்புகள் (2008)
  • சார்லஸ் டார்வின் : பரிணாமத்தின் பரிமாணங்கள் (2009)
  • அமெரிக்கன், ஹென்றி ஜேம்ஸ் (2009)
  • இறுதி சுவாசம், லூயி புனுவல் (2009)
  • மைமோசா, ஜாங்ஜி யான்லியாங் (2010)
  • குற்றப்பரம்பரை அரசியல்' முகில்நிலவன் (2010)
  • லடாக்கிலிருந்து கவிழும் நிழல்' பபானி பாட்டாச்சாரியா (2011)
  • பாப்லோ நெரூடா: நினைவுக் குறிப்புகள் (2011)
  • சுதந்திரம் மற்றும் மக்கள் விடுதலை குறித்த பிரச்சனைகள்' கோபாட் காந்தி/ உரையாடல் (2013)
  • அரேபிய இரவுகளும் பகல்களும், நகிப் மஹ்ஃபூஸ் (2014)
  • தமிழ்நாட்டு அரசியல்' பேரா.ராஜய்யன் (2015)
  • சூதாடியும் தெய்வங்களும்' வாய்மொழிக்கவிதைகள் (2015)
  • புனைவும் பிரக்ஞையும்“ பிறமொழிக் கதைகள் மற்றும் பதிவுகள் (2016)
  • ' ரில்கேயின் கடிதங்கள்' ரில்கே (2016)
  • சாதி எதிர்ப்பும் இடம்பெயர்க்கப்பட்ட பூர்வீகவாதமும், மீனா தண்டா (2016)
  • ' இரண்டு வருடங்கள் எட்டு மாதங்கள் இருபத்தெட்டு இரவுகள்' சல்மான் ருஷ்டி (2016)
  • ' வரலாற்றின் அலையோசை முழங்கும் இந்துமாக்கடல்' சஞ்சீவ் சன்யால் (2017)
  • நிழல்வெளி, தமிழச்சி தங்கபாண்டியன் (2017)
  • தாஸ்தோயெவ்ஸ்கி ஓர் எழுத்தாளனின் நாட்குறிப்பு(ஏப்ரல் 2019)
  • எதிர் கடவுளின் சொந்த தேசம் - எ.வி.சக்திதரன் (2020)
  • வாய்மொழிக் கதைகளும் பின்புலக் குறிப்புகளும் (2021)
  • மதுரை வரலாறு பேரா.கே. ராஜய்யன் (2021)
  • செங்கிஸ்கானும் நவீன உலகின் உருவாக்கமும் ஜேக் வெதர்ஃபோர்ட் (2022)
  • நகைக்கத்தக்கதல்ல - அம்பேத்கர் கேலிச்சித்திரங்கள் - உண்ணாமதி சியாம சுந்தர் (2022)
  • ரோசா லக்ஸம்பர்க்கும் ஜனநாயக மீட்டுருவாக்கத்துக்கான போராட்டமும், ஜான் நிக்ஸன்
  • ' சத்யஜித் ரே-ஷியாம் பெனகல் உரையாடல்'
Remove ads

தொகுப்பு

  • எமிலிக்காக ஒரு ரோஜா - உலகின் தலை சிறந்த காதல் கதைகள் (2012)

விருதுகள்

  • திசை எட்டும் விருது பிளாடெரோவும் நானும் நூலுக்காக (2005)
  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மொழிபெயர்ப்பு விருது அமெரிக்கன் நாவலுக்காக (2005)
  • 'சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பு விருது லடாக்கிலிருந்து கவிழும் நிழல் (2011)
  • ஆனந்தவிகடன் சாதனையாளர் விருது (2015)
  • சென்னை புத்தகக் கண்காட்சி விருது (2016)


மேற்கோள்கள்

வெளி இணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads