சிகரம் தொடு

கௌரவ் நாராயணன் இயக்கிய 2014 ஆம் ஆண்டு திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

சிகரம் தொடு
Remove ads

சிகரம் தொடு 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இதை கௌரவ் நாராயணன் இயக்கினார்; யுடிவி மோசன் பிக்சர்சு தயாரித்தது. விக்ரம் பிரபு, சத்யராஜ், மனோல் கஜ்ஜார், கே. எசு. இரவிக்குமார் போன்றோர் நடித்துள்ளனர். டி. இமான் [1] இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

விரைவான உண்மைகள் சிகரம் தொடு, தயாரிப்பு ...
Remove ads

நடிப்பு

கதை சுருக்கம்

தாவருவி\தானியங்கும் வங்கி கருவி (ATM) மூலம் பலருடைய போலி தாவருவி கொண்டு கொள்ளையர்கள் பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் அவர்களை பிடிக்கமுடியாமல் காவல்துறை திணறுகிறது.

சிறந்த காவல்துறை அதிகாரியான செல்லப்பா பணியின் போது தனது ஒரு காலை இழக்கிறார். இவர் தனது மகனான முரளிபாண்டியனை சிறந்த காவல்துறை அதிகாரி ஆக்கிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் முரளி பாண்டியனுக்கோ காவல்துறை வேலை பிடிக்கவில்லை தான் வங்கியில் மேலாளர் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் தந்தை மீது மிகுந்த பாசம் கொண்ட அவர், தன் தந்தையின் ஆசையை தட்டமுடியாமல் உள்ளார். இச்சமயத்தில் வெளிமாநிலங்களுக்கு தன் தாத்தா மற்றும் பலருடன் குழு சுற்றுலா செல்கிறார். தன் நண்பனையும் கூட்டிச்செல்கிறார்.

சுற்றுலாவுக்கு மருத்துவர் அம்புஜமும் அவர் பாட்டி ஐஸ்வரியாவும் வருகின்றனர். அம்புஜத்திடம் காதல் கொள்ளும் முரளி பாண்டியன் அவரிடம் சுற்றுலா முடிவதற்குள் தன் காதலை சொல்லிவிட வேண்டும் என்று முயல்கிறார். முரளி பாண்டியன் பற்றி அம்புஜத்துக்கு நல்ல எண்ணம் இல்லை. சில நாட்களில் இருவரும் காதலர்கள் ஆகிவிடுகின்றனர். அம்புஜதிற்கும் காவல்துறை அதிகாரி மீது வெறுப்பு. அவர் காவல்துறை அதிகாரி தன் கணவனாக கூடாது என்று பிடிவாதமாக உள்ளார்.

இவர்கள் வீடு திரும்பும் போது முரளி பாண்டியனின் தாத்தா தாவருவி மூலம் பணம் எடுக்க செல்கிறார். அப்போது அங்கு கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்களால் அவர் உயிருக்கு ஆபத்து நேரிடுகிறது. முரளி பாண்டியன் கொள்ளையர்களை தடுத்து தன் தாத்தா உயிரை காப்பாற்றினாலும் அவருக்கு நெஞ்சில் கத்தி காயம் ஏற்பட்டு விடுகிறது. கொள்ளையர்கள் தப்பிவிடுகின்றனர்.

சுற்றுலா முடித்து வீட்டுக்கு வரும் முரளி பாண்டியனுக்கு காவல் துறையில் சேர தபால் வந்துள்ளதை செல்லப்பா காட்டுகிறார். அதனால் தன் தந்தை சொல்லை தட்டமுடியாமல் காவல்துறை பயிற்சிக்கு சேர்கின்றான். ஆனால் தன் காதலியிடம் வங்கி வேலை விடயமாக சிம்லாவுக்கு செல்வதாக பொய் கூறுகின்றான். அங்கு இவனது அறை தோழனாக ஆதிமூலம் வருகிறார். தான் பயிற்சியில் சரியாக செய்யாவிட்டால் தான் காவல்துறை வேலைக்கு தகுதியில்லை என்று கூறிவிடுவார்கள் அதனால் தந்தை சொல்லை கேட்டமாதிரியும் இருக்கும் தான் காவல்துறையில் சேரவும் வேண்டாம் என்று எண்ணுகிறான்.

காவல் துறை பயிற்சி மையத்தின் அதிகாரி வீட்டுக்கு செல்லும் முரளி பாண்டியன் அங்கு அம்புஜம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறான். அப்போது தான் அவள் அம்மையத்தின் அதிகாரியின் மகள் என்று தெரியவருகிறது. அதிகாரி செல்லப்பா தன்னை காப்பாற்றியதால் தான் காலை இழந்தார் என்றும் ஒரு மாதம் முரளி பாண்டியன் காவல் துறையில் அதிகாரியாக வேலைசெய்யவேண்டும் எனவும் அப்பவும் அப்பணி பிடிக்கவில்லை என்றால் பணியிலிருந்து விலகிக்கொள்ளலாம் என்றும் செல்லப்பாவிற்கு தான் சமாதானம் செய்வதாகவும் கூறுகிறார். இதை ஏற்ற முரளி பாண்டியன் பயிற்சியில் சிறப்பாக தேறி காவல் துறை அதிகாரியாக பணியில் சேருகிறார்.

தாவருவியை கொள்ளையடிக்க முயலும்போது கொள்ளையர்கள் அவ்வழி வரும் செல்லப்பாவால் தடுக்கப்பட்டு சிறைக்கு செல்கின்றனர். பணியில் சேர்ந்து ஒரு மாதம் முடியப்போவதை ஒட்டி அம்புஜத்துடன் முரளி பாண்டியன் திரைப்படம் பார்க்க சென்று விடுகிறார். அப்போது கொள்ளையர்கள் சிறையில் இருந்து தப்புகின்றனர். அச்சமயம் அங்கு வரும் செல்லப்பாவை அடித்து அவரது நெஞ்சில் துப்பாக்கியால் சுட்டு விடுகின்றனர்.

செல்லப்பா சுடப்பட்டு இருப்பதை அறிந்த முரளி பாண்டியன் தாவருவி கொள்ளையர்களை காவல் துறை அதிகாரியாக இருந்து பிடிக்க முடிவெடுக்கிறார். எவ்வாறு துப்பு துலங்கி தாவருவி கொள்ளையர்களை கண்டுபிடிக்கிறார், அவர்களால் அம்புஜத்திற்கு ஏற்படும் ஆபத்தை எப்படி நீக்குகிறார் என்பதை விறுவிறுப்பாக இயக்குநர் படத்தில் கூறியுள்ளார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads