சிக்கிம் சாரணர்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிக்கிம் சாரணர் படை (Sikkim Scouts) என்பது இந்தியாவின் மலைப்பாங்கான பகுதியில் சீனா எல்லையை ஒட்டி அமைந்த சிக்கிம் மாநிலத்தின் உள்ளூர் இளைஞர்களைக் கொண்ட இந்தியத் தரைப்படையின் ஒரு படைப்பிரிவு ஆகும் . 2013ல் நிறுவப்பட்டு, 2015ல் செயல்பாட்டிற்கு வந்தது. சிக்கிம் சாரணர் படை 11வது கோர்க்கா ரைஃபிள்சுடன் இணைந்துள்ளது.[2] ஒரு கர்ணல் தரத்திலான இராணுவ அதிகாரியால் சிக்கிம் சாரணர் படை வழிநடத்தப்படுகிறது. லடாக் ஸ்கவுட்ஸ் மற்றும் அருணாச்சல் ஸ்கவுட்ஸ் போன்றே சிக்கிம் சாரணர் படையும் இந்தியத் தரைப்படைக்கு உதவிட இந்தியா-சீனா எல்லைப்புறப் பகுதியான திபெத்தை கண்காணித்தல், வேவு பார்த்தல், சுற்றுக் காவல் பணி புரிதல் மற்றும் செய்தி சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
Remove ads
அமைப்பு
கர்ணல் தரத்திலான அதிகாரியின் தலைமையிலான சிக்கிம் சாரணர் படை இரண்டு பட்டாலியன்களைக் கொண்டது. இப்படையில் சுமார் 85% சிக்கிம் மாநிலத்தவர்களை கொண்டது.
இந்திய இராணுவத்தில் சிக்கிம் சாரணர்களின் பங்கு
சிக்கிம் சாரண வீரர்கள் மலைப் போர் தந்திரங்களில் பயிற்சி பெற்றவர்கள் . படைப்பிரிவின் உறுப்பினர்கள் பெரும்பாலும் உள்ளூர்வாசிகளாக இருப்பதால், மலைப் பிரதேசத்தில் இயங்குவதற்கும், உயிர்வாழ்வதற்கும் தேவையான திறன்களை பெற்றுள்ளனர் சிக்கிம் சாரணர்களின் நவீன போர் பயிற்சி முறைகள், இராணுவ ஒழுக்கத்தை வளர்க்க உதவுகிறது.[3] இந்திய இராணுவத்திற்கு கூடுதல் நன்மையாக, சிக்கிம் சாரணர்கள் ஒரே பண்பாடு கடைப்பிடிப்பதாலும் மற்றும் ஒரே மொழியைப் பேசுவதாலும், எல்லைப்புற உள்ளூர்வாசிகளிடமிருந்து தகவல்களை எளிதாகப் பெற முடிகிறது. போர்க் காலங்களில் சிக்கிம் சாரணர் படை தங்கள் சொந்த மாநிலத்திற்காக இறுதிவரை போராடத் தயாராக இருப்பார்கள் என்று இந்திய இராணுவப் படைத்தலைவர்கள் கருதுகிறார்கள் [4]
சிக்கிமின் எல்லைகளை, குறிப்பாக சீனாவுடனான வடகிழக்கு எல்லையின் உயரமான மலைப்பாதைகளை கண்காணித்து பாதுகாக்கும் பணியை சிக்கிம் சாரணர் படை மேற்கொள்ளும். சிக்கிம் சாரணர்கள் நிரந்தரமாக சிக்கிம்-திபெத் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளதால், தங்கள் முழு வாழ்க்கையையும் மாநிலத்திலேயே செலவிடுவார்கள்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads